1. தோட்டக்கலை

நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
High yielding micronutrients in paddy cultivation!

மனிதர்களானாலும் சரி, மண் என்றாலும் சரி, இரண்டுக்குமே ஊட்டச்சத்து தேவை.

உயர்விளைச்சல் (High yield)

அந்த வகையில், மண்ணின் வளம், தரமான விதைகள், தேவையான நீர் பாசனம் உள்ளிட்ட பலக் காரணிகள் பயிர் விளைச்சலுக்கு பேருதவி செய்தாலும், நாம் கொடுக்கும் நுண்சத்துக்கள்தான் உயர் விளைச்சலுக்கு வித்திடுகிறது.

அதனால்தான் இவற்றை ஊட்டச்சத்து டானிக் என்கிறோம். சரி நெற்பயிரில் உயர் விளைச்சலுக்கு எந்தெந்த நுண்சத்துக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன என்பது பற்றிப் பார்ப்போம்.

நுண்சத்துக்கள் (Micronutrients)

  • ஒரு எக்டருக்கு 25 கிலோ ஜிங்க் சல்பேட்டை (Zinc sulphate) 50 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவின் போது இட வேண்டும்.

  • தமிழ்நோடு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கிய நெல் நுண்ணூட்டக்கலவை 25 கிலோவை 250 கிலோ (1:10) தொழு உரத்துடன் கலந்து 30 நாட்கள் வைத்து ஊட்ட மேற்றி நடவுக்கு முன் இட வேண்டும்.

  • வயலில் ஒரு எக்டருக்கு 6.25 டன் தழை உரம் அல்லது ஊட்டமேற்றிய தொழுஉரம் இடப்பட்டிருப்பின், ஒரு எக்டருக்கு 12.5 கிலோ ஜிங்க்சல்பேட் போதுமானதாகும்.

  • உவர் மண், களர் (சோடியம்) மற்றும் சோடிய மண்ணில் 37.5 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும்.

  • கடைசி உழவின் போது ஒரு எக்டருக்கு 500 கிலோ ஜிப்சத்தை இட வேண்டும். (ஜிப்சம் - கால்சியம் மற்றும் கந்தகச் சத்தின் ஆதாரம்)

  • இரும்புச்சத்து பற்றாக்குறையுள்ள மண்ணாக இருப்பின் எக்டருக்கு 50 கிலோ பெர்ரஸ்சல்பேட்டுடன் 12.5 டன் தொழு உரம் கலந்து இட வேண்டும்.

  • அதேநேரத்தில், கந்தகச் சத்து பற்றாக்குறை இருப்பதுத் தெரியவந்தால், 40 கிலோ கந்தகத்தை ஜிப்சமாக இடலாம்.

  • இரும்புச்சத்து பற்றாக்குறையுள்ள மண்ணாக இருப்பின் எக்டருக்கு 50 கிலோ பெர்ரஸ்சல்பேட்டுடன் 12.5 டன் தொழு உரம் கலந்து இட வேண்டும்

அதேவேளையில் கந்தகச்சத்துப் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தால், 40 கிலோ கந்தகத்தை ஜிப்சமாக இடலாம்.

தகவல்

அக்ரி சு.சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை.
94435 70289

மேலும் படிக்க...

மீன் வளர்க்க ரூ.1.8 லட்சம் வரை மானியம்!

மகசூலை அதிகரிக்க விதைகளின் முளைப்புத் திறனை அறிவது அவசியம்!

 

English Summary: High yielding micronutrients in paddy cultivation! Published on: 07 December 2021, 08:20 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.