சமீபகாலமாக மலர் சாகுபடியில் விவசாயிகளிடம் அதிகம் பிரபலமாகி வருகிறது இந்த பட்டன் ரோஸ் சாகுபடி. அதேசமயம் விவசாயின் பொருளாதார நிலையை திடீரென உயர்த்தும் பயிர்களில் இதுவும் ஒன்று. பட்டன் ரோஸ் மலர் சாகுபடி குறித்த அனைத்து அம்சங்களும் இங்கே காணலாம்...
பட்டன் ரோஸ் மலர்கள் அழகாகவும், பார்ப்பதற்கு கண்களுக்கு குளிச்சியாகவும் இருக்கிறது. இவைகள் மனதிற்கு ஒருவித மனமகிழ்ச்சியை கொடுக்கிறது. இதில் பல வகைகள் அதாவது பல நிறங்களில் உள்ளன . அவற்றில் பிரபலமான நிறங்கள் fanta என்கிற வெள்ளை கலந்த மஞ்சள் மற்றும் chocolate என்கிற அடர் சிவப்பு இவற்றிற்கு சந்தையில் நல்ல விற்பனை வாய்ப்பு.
பட்டன் ரோஸ் வரவால் குறைந்த பாரம்பரிய ரோஜா
தண்ணீர் தேங்காத அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மை உடையவை . இயற்கை சீற்றங்கள் மற்றும் ஓரளவுக்கு வறட்சி தாங்கி வளரும். இந்த ரகத்தின் வரவால் நம் பாரம்பரிய ரோஜா இனங்களின் சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்து விட்டது.
மார்கழி & ஆடி பட்டம்
-
பட்டம் என்று பார்த்தால் மார்கழி மற்றும் ஆடி மாதம்.
-
நன்கு உழவு ஓட்டி (தொழுஉரம்இட்டு) லேசாக மேட்டு பாத்தி அமைத்து 4×5 , 5×5, 2×5 , 2.5× 5 , 2×6 அடி ஆகிய இடைவெளியில் அரை அடி ஆழ குழிகளில் மண்புழு உரம் சிறிது இட்டு நடவு செய்ய படுகின்றன.
-
தேர்ந்தெடுக்கப்படும் இடைவெளியை பொறுத்து கன்றுகளின் தேவை இருக்கும். விலை பதினைந்து ரூபாய் வரை . தரமான கன்றுகளை தேர்வு செய்வது நலம் .
-
நட்ட மூன்று மாதங்களில் பூக்கள் பறிக்க ஆரம்பிக்கலாம். களை கட்டுப்பாடு மிக முக்கியம் அப்போது தான் உருவத்தில் பெரிய மற்றும் தரமான மலர்கள் கிடைக்கும்.
சொட்டுநீர் பாசனம்
பாசனம் என்று வரும்போது சொட்டு நீர் பாசனம் சிறந்தது. இதன் மூலம் களை ஓரளவு கட்டுப்படும். நேரடி பாசனம் செய்பவர்கள் இயந்திரம் மூலம் களையை கட்டுப்படுத்தலாம். சால் இடைவெளியில் சணப்பை விதை தூவி நன்கு வளர்ந்த உடன் அவற்றை பிடுங்கி மூடாக்காக இடலாம்.
மாதம் ஒருமுறை நுன்னூட்ட கலவை அளிக்க வேண்டும் . மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தொடர்ந்து பாசன நீரில் கலந்து விடலாம். செறிவூட்டப் பட்ட தொழுவுரம் கண்டிப்பாக இட வேண்டும் .
பூச்சி மேலாண்மை
-
பட்டன் ரோஸ் மலர்களை தாக்கும் பூச்சிகள் என்று வரும் போது சாறு உறிஞ்சும் பூச்சி, சாம்பல் நோய், மாவுப்பூச்சி , இலை கருகல் மற்றும் வேர் அழுகல் . கற்பூர கரைசல் மூலம் இவற்றை எளிதாக கட்டுப்படுத்தும்.
-
புண்ணாக்கு கரைசல் மற்றும் மீன் அமிலம் கலந்து தொடர்ந்து தெளிப்பதன் மூலம் இருபது சதவீதம் மகசூலை அதிகரிக்கலாம். எடை அதிகமான மற்றும் வசீகரமான பூக்கள் கிடைக்கும். பழக் கரைசல் தெளிப்பதன் மூலமும் பலன் கிடைக்க வாய்ப்பு.
-
இவை ஒரளவு நிழலையும் தாங்கி வளரும் தன்மை உடையதால் தென்னை மரங்கள் இடையே நடவு செய்யலாம். ஆனால் சிறிது மகசூல் குறையும்.
-
மற்ற மலர் பயிர்களான சம்பங்கி, குண்டு மல்லி போன்றவற்றில் இருப்பது போன்ற சிரமங்கள் இதில் இல்லை . அந்த அளவிற்கு பூச்சி தாக்குதலும் குறைவு .
வசதிக்கேற்ற சாகுபடி
-
இந்த மலர் சாகுபடி யில் ஒரு வசதி என்னவென்றால் இன்று பறிக்க இயலவில்லை என்றால் நாளை பறிக்கலாம். இதழ்கள் உதிராது . விஷேச நாட்களை குறிவைத்தும் பறிக்கலாம் .
-
மலர்களில் அதிக மற்றும் நிலையான சந்தைவிலை உள்ளது . அனேகமாக கிலோ சராசரியாக நூறு ரூபாய்க்கு குறைவது இல்லை.
-
எந்த வண்ணத்திற்கு விற்பனை வாய்ப்பு என்று அருகில் உள்ள சந்தையில் விசாரித்து பின் கன்றுகள் நடுவது நல்லது.
-
தினமும் சுமார் முப்பது கிலோ வரை ஏக்கருக்கு வர வாய்ப்பு. வெயில் காலங்களில் சற்று மகசூல் குறையும். அந்த நேரத்தில் மகசூலை பெருக்குவது விவசாயின் திறமை.
-
குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்து மகசூல் கிடைக்கும். சரியான காலங்களில் கவாத்து செய்வதால் அதிக துளிர்கள் மற்றும் மொட்டுகள் கிடைக்கும். நோய் தாக்குதல் சற்று குறையும்.
நடவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் நடவு செய்து உள்ள விவசாயிகளின் தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டு நிறை குறைகளை விசாரித்து பின் நடவு செய்யலாம். இதனால் தேவையற்ற சிரமங்களை தவிர்க்கலாம் .
நன்றி.
ஸ்ரீதர் சென்னை. 9092779779.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயம் செய்ய 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம்!
நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க வந்துவிட்டது நவீன இயந்திரம்! தஞ்சையில் செயல்முறை விளக்கத்துடன் பரிசோதனை!
Share your comments