Krishi Jagran Tamil
Menu Close Menu

தக்காளி செடியில் இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்- பாதுகாப்பது எப்படி?

Sunday, 24 January 2021 02:27 PM , by: Elavarse Sivakumar
Leaf curl toxin disease in tomato plant- How to protect?

Credit : You Tube

தக்காளியைத் தாக்கி, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் இலைச்சுருட்ட நச்சுயிரி நோயில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

நச்சுயிரி நோய் (Toxic disease)

தக்காளியில் இலைச்சுருட்டு நச்சுயிரி நோயானது முதன்மையானது ஆகும். மேலும் இந்த நச்சுயிரி நோய் வெள்ளை ஈக்கள் மூலம் பரவுகிறது. இவற்றை கட்டுப் படுத்துவதில் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேர்கிறது.

அறிகுறிகள் (Symptoms)

 • புதிதாக வளரும் தக்காளிச் செடியின் இலைகள் மஞ்சளாகிவிடும்.

 • பிறகு இலைகள் சுருண்டு தாவரத்தின் வளர்ச்சி படிப்படியாகக் குறைந்துவிடும்.

 • பச்சை இலைகள் அளவில் குறைந்து சுருங்கி நரம்புகள் மஞ்சளாக மாறிவிடும்.

 • இலைகள் மேல்நோக்கி சுருண்டு, கிண்ணம்போல் இருக்கும் பூக்கள் தோன்றும். ஆனால் காய் பிடிப்பதற்குள் உதிர்ந்து விடும்.

பாதுகாக்க வழிகள் (Preventive measures)

 • இமிடாகுளோரைடு அல்லது டைமெதோவேட்டை 0.05 சதவீதம் அதாவது ஒருலிட்டர் தண்ணிருக்கு 0.5 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து நடவு முடிந்த, 15-வது, 25-வது மற்றும் 45-வது நாட்களில் தெளித்தால், நோயைக் கட்டாயம் கட்டுப்படுத்திவிடலாம்.

மேலும் விபரங்களுக்கு மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானிகளாக செல்விரமேஷ், சீ. கிருஷ்ணகுமார் ஆகியோரை 7904310808 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

வண்ண வண்ண மலர்கள் விற்பனையில் அதிக லாபம் தரும் - பட்டன் ரோஸ் சாகுபடி!

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!

இலைச்சுருட்டு நச்சுயிரி நோய் தக்காளியை பாதிக்கிறது பாதுகாப்பது எப்படி Leaf curl toxin disease in tomato plant? How to protect?
English Summary: Leaf curl toxin disease in tomato plant- How to protect?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. 10 ரூபாயில் சூப்பர் திட்டம்! அரசு ஊழியர் அல்லாதவர்களும் பென்ஷன் பெற வாய்ப்பு!
 2. திருப்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
 3. தென்னையில் ஊடுபயிராக சணப்பை சாகுபடி! மண்வளம் பெருகி மகசூல் அதிகரிக்கும்!
 4. அரசு பள்ளி ஆசிரியர் விளைவித்த பாரம்பரிய நெல்லை அறுவடை செய்த வேளாண் கல்லுாரி மாணவியர்கள்
 5. கோடைகாலப் பால் உற்பத்தி பாதிப்பு- தடுக்க என்ன செய்யலாம்?
 6. சரிந்தது சின்ன வெங்காயத்தின் விலை -மேலும் குறைய வாய்ப்பு!
 7. PAN மற்றும்-Aadhaar அட்டையை இணைக்கத் தவறினால், ரூ.10,000 அபராதம்!
 8. இயற்கை விவசாயத்திற்கு மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு!
 9. Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !
 10. தனிநபர் சேமிப்பை மையப்படுத்தும் எல்ஐசியின் "பீமா ஜோதி" பாலிசி அறிமுகம்!!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.