நீரின்றி அமையாது இவ்வுலகு - ஆம் நீரின்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. நமக்கு மட்டுமல்ல.. இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ நீர் மிக அவசியம். இதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
நம் முன் இருக்கும் பெரிய சவால்கள் நீர் மேலாண்மை, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், வெப்பமயமாதல் போன்றவையாகும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான நீர் நம்மிடம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
வறட்சி காலங்களில் மட்டுமே அதிகம் பேசப்பட்டு வந்த நீர் மேலாண்மை இன்று எல்லா பருவ காலங்களிலும் பேசும்படி ஆகி விட்டது. இருக்கும் நீரை சிக்கனமாகவும், முறையாகவும் பயன் படுத்துவதன் மூலம் தண்ணீரின் தேவையை நம்மால் பூர்த்தி செய்ய முடியும்.
விவசாய நிலங்கள், தோட்டங்கள் போன்றவற்றில் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணுயிர் பாசனகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு அரசும் மானியம் தருகிறது.
இயற்கையான முறையில் வறட்சி மேலாண்மை
- தோட்டகலையில் மிக முக்கியமானது வறட்சி மேலாண்மை, பயிர்களுக்கு முறையான இடைவெளியில் போதுமான அளவு நீர் விடுதல் மிக அவசியமானது. தோட்டக்கலை நிபுணர்கள் வறட்சி மேலாண்மை குறித்து சில யோசனைகளை கொடுத்துள்ளனர்.
- சாகுபடிக்காக நிலத்தை தயாரிக்கும் போது எளிய முறையாக, கடைசி உழவின் சமயத்தில் ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரம் இட்டு உழும் போது மண்ணின் ஈர தன்மை நிலைத்து இருக்கும்.
- வறட்சி காலங்களில் பயிர்களுக்கான இடைவெளியில் கரும்பு மற்றும் சோளம் சோகைகளை பயன்படுத்துவதின் மூலம் மண்ணின் ஈரபதம் பாதுகாக்க படும்.
- தென்னை நார் கழிவு, தென்னை மட்டை, தென்னை ஓலை போன்றவற்றை கொண்டு நிலத்தின் நீர்வளத்தை பாதுகாக்க முடியும்.
- தென்னை மரங்களை சுற்றி அதன் மட்டை கொண்டு வட்ட பத்தி அமைப்பதன் மூலம் கனிசமான நீரை சேமிக்கலாம், அதுமட்டுமல்லாது மண்ணின் ஈர பதம் பாதுகாக்க படும்.
- சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவதினால் அதிக அளவிலான நீர் சேமிக்க படுவதுடன் வேர் பகுதிகளில் ஈர பதம் காக்கபடும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments