1. தோட்டக்கலை

இயற்கை பூச்சி விரட்டியான மோர்க்கரைசல் தயாரிப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to make natural insect repellent mortar?
Credit : Sunshine

இயற்கை விவசாயத்தில் பயிருக்கு தீமை செய்யும் பூச்சி மற்றும் புழுக்களைச் சமாளிப்பது என்பது மிகவும் சவால் மிகுந்தது. அதற்காகப் பாரம்பரியமாக இயற்கை விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வரும் மருந்துகளில் மோர்க்கரைசல் மிகவும் முக்கியமானது.

எனவே அதனை எவ்வாறு தயாரிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள் (required things)

அரப்பு இலைத்தூள்       - 1 கிலோ
இளநீர்                          - 1 லிட்டர்
புளித்த மோர்                - 5 லிட்டர்

செய்முறை (Preparation)

  • அரப்பு இலைத்தூளை படியில் ஒரு கிலோ அளவிற்கு அளந்து எடுத்துக்கொள்ளவும்.

  • இத்துடன் ஒரு லிட்டர் இளநீர் மற்றும் 5 லிட்டர் மோர் சேர்த்து ஊற்றிக் கலக்க வேண்டும்.

  • இந்த கரைசலை மண் பானையில் செய்வது நல்ல பலனைத் தரும்.

  • இந்த கரைசலை 7 நாட்கள் வரை அப்படியே வைத்துவிடவும்.

பிறகு 10 லிட்டர் தண்ணீரில், இருநூறு மில்லி அரப்பு மோர்க்கரைசலைச் சேர்த்துக் கலந்து வயலில் தெளிக்கலாம். இதனால் நல்ல மகசூல் கிடைக்கும். இந்தக்கரைசலைத் தயாரிக்க 50 ரூபாய்தான் செலவாகும்.

தேமோர்க் கரைசல்

தேவையான பொருட்கள் (Ingredients)

புளித்த மோர்       - 5 லிட்டர்
இளநீர்                  - 1 லிட்டர்
தேங்காய்              - 10
அழுகிய பழங்கள் - 10 கிலோ

செய்முறை (Preparation)

  • தேங்காய்களைத் துருவி எடுத்துக்கொள்ளவும். மோர் மற்றும் இளநீரை ஒரு கேனில் ஊற்றவும்.

  • பின்னர் தேங்காய் துருவல், அழுகிய பழங்கள் ஆகியவற்றைச் சாக்குப்பையில் பொட்டலம் போல் கட்டி, அந்தக் கரைசலில் போடவும்.

  • 7ம் நாளில் ஊறல் தயாராகி விடும்.

ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்துத் தெளிக்கவும்.
இந்த கரைசல் Biozyme & Cytozymeமிற்கு நிகரானது.

இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர்கள் இந்த வகைக் கரைசல்களைத் தயாரித்து, பூச்சி மற்றும் புழுக்களிடம் இருந்து உங்கள் பயிர்களைப் பாதுகாக்கலாம்.

மேலும் படிக்க....

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் விலை கடும் வீழ்ச்சி!

காங்கேயத்தில் நாளை கால்நடைத் திருவிழா!

பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!

English Summary: How to make natural insect repellent mortar? Published on: 15 February 2021, 10:00 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.