1. தோட்டக்கலை

தேனீக்கள் அழிந்துவிட்டால், மனிதனின் வாழ்நாள் சொற்ப ஆண்டுகளே- எச்சரிக்கும் இயற்கை ஆர்வலர்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
If bees become extinct, human life span is short - warn nature lovers!

உலகின் மிகச் சிறந்த மகரந்த சேர்க்கையாளராகத் திகழ்பவைத் தேனீக்கள். சர்வதேசத் தேனீக்கள் தினமான இன்று அவற்றைப் பற்றிய பலத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

சர்வதேசத் தேனீக்கள் தினம் (International Bee Day)

பல கோடி மகரந்தச் சேர்க்கைக்கு வித்திடுவதன் மூலம் உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணமானத் தேனீக்கள் தற்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

ஒட்டு மொத்த மனிதக்குலத்தாலும் பூமிக்கு விளையாத நன்மை ஒரே ஒரு தேனீயால் விளையும். இதற்குத் தேனீக்களின் வாழ்வியல் குணங்களைத் தெரிந்துகொள்வோம்.

தேனீக்கள் குடும்பம் (Family of bees)

பொதுவாக இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பார்கள். மற்ற வகைத் தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

தேனீக்களின் ஆயுள் (Life of bees)

இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாட்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாட்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

அவ்வாறு தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள்ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

ஏப்பமிட்டு சேகரித்தல் (Accumulating and collecting)

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். இதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.

தேன் உருவாக்கம் (Honey formation)

கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும்.இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும்.

தேன் சேகரிக்கும் தர்மம் (Charity of collecting honey)

தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனீக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்.

தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம்.

அழியும் தேனீக்கள் (Extinct bees)

ஆனால் விவசாயத்திற்காக மனிதர்கள் பயன்படுத்தும் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் ஆகியவை தேனீக்களை அழித்துவிடுகின்றன.

வாழ்நாள் குறையும் (Lifespan will decrease)

அவ்வாறு தேனீக்கள் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதனின் வாழ்நாள் சொற்ப ஆண்டுகளாகக் குறையும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதேநேரத்தில் இந்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது என்பதை நாம் இப்போதே உணர்வோம்?

மேலும் படிக்க...

மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!

மரவள்ளி கிழங்கு சாகுபடியில், மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை!

தேங்காய் விலை சரிவால், கொப்பரை உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்!

English Summary: If bees become extinct, human life span is short - warn nature lovers! Published on: 20 May 2021, 10:29 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.