இயற்கை வேளாண்மையில் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது விவசாய நிலத்தினை உலர விடாமல் பாதுகாக்க வேண்டும். பொதுவாக நடவு இல்லாத காலங்களில் நிலத்தை அப்படியே விட்டு விட கூடாது. ஏன்னெனில் காற்றானது அது செல்லும் இடங்களில் உள்ள ஈரத்தை எல்லாம் கிரகித்து நிலத்தை உலர செய்து விடும். இவற்றை தடுப்பதற்கு உயிர் வேலி வேளாண்மை மிக அவசியமாகும்.
விவசாயம் இல்லாத காலங்களில் சவுண்டல், அகத்தி, கிளரிசிடியா, நொச்சி மாதிரியான பயிர்களை வேலிப்பயிராக நட்டு, உயிர்வேலி அமைத்து நிலத்து நீரை தக்கவைத்து கொள்ள வேண்டும். வேலியோரமாக அல்லது வரப்புகளில் வளர்ந்து நிற்கிற மரங்கள் காற்றின் வேகத்தை தடுத்து, நிலத்தின் ஈரத் தன்மையை பாதுகாக்கும். பொதுவாக உயிர்வேலியை மழைக் காலங்களில் நட்டு விட்டால், நன்கு வேர் பிடித்து பிறகு எந்த வறட்சியிலும் நிலைத்து நிற்கும். பொதுவாக காற்றுத் தடுப்பு வேலி உயரத்தைவிட நான்கு மடங்கு தூரம் திறம்பட செயல்படும்.
விவசாய நிலத்திற்கு முதலில் ஒரு நல்ல வேலி அவசியம். உயிர் வேலியை அமைப்பதன் மூலம் வறட்சி, நோய், எதிர்ப்புத்திறன், விதையின் மூலம் சுலபமான பயிர் பெருக்கம், விரைவான வளர்ச்சி அடர்த்தியான இலைகள், கடும் கவாத்திற்கு தாங்கும் திறன் என அனைத்தும் கிடைக்கும்.
வேலிமசால், கிளுவை போன்றவற்றை உயிர் வேலியாக அமைப்பதன் மூலம் அவற்றை கவாத்து செய்யும் போது கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
விவசாய நிலத்தை சுற்றிலும் கட்டையால் உயிர் வேலி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீரை உயர்த்த முடியும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments