காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என கடலூர் மாவட்ட வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து கடலூர் மாவட்டத்தின், அண்ணாகிராமம் தோட்டக்கலை உதவி இயக்குநர் லோ.நாகநந்தினி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :
காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கத்திரி, வெண்டை, புடலங்காய், பீர்க்கன், பூசணி, பரங்கி, சுரை பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.2,500 வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள்,
-
விதை அல்லது நடவு செடிகளை சாகுபடி செய்வதற்காக கொள்முதல் செய்த விலைப்பட்டியல்,
-
கிராம நிர்வாக அலுவலர் அளித்த அடங்கல்,
-
சிட்டா
-
குடும்ப அட்டை நகல்
-
ஆதார் அட்டை நகல்
-
வங்கிப் புத்தக நகல்
-
சிறிய புகைப்படம்-2
-
ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.ஒரு விவசாயிக்கு சாகுபடி செய்த பரப்பின் அடிப்படையில் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களை அறிய தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
தண்டுப்புழுக்களைத் தெறிக்க விடும் அக்னி அஸ்திரம்- தெரியுமா உங்களுக்கு!
Share your comments