குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்திய விவசாயி உலகின் விலையுயர்ந்த காய்கறியை அறுவடை செய்து சாதித்துள்ளார். Hop Shoots என்ற அறியப்படும் இந்த அரியவகை காய்கறியின் விலை, ஒரு கிலோ ரூ.85,000 முதல் ஒரு லட்சம் என அறியப்படுகிறது.
இந்திய விவசாயிகளுக்கு விவசாயம் என்பது எப்போதுமே மிகவும் அபாயகரமான ஒன்றாகவே உள்ளது. புதிய பயிர் வகைகள் நவீனமயமாக்கல் முறைகள் காரணமாக விவசாயிகளும், விவசாய முறைகளை மாற்ற வேண்டிய நிலைக்கு உள்ளாகுகின்றனர். விவசாயிகளும் உற்பத்தி திறனை அதிகரிக்க இந்த முறைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் அதிகமாக வருமானம் (Income) ஈட்ட முடிகிறது. பீகாரை சேர்ந்த ஒரு விவசாயி இந்த விஷயத்தில் விவரமாக சில விஷயங்களை செய்துள்ளார். இப்போது அவர் தனது தோட்டத்தில் மிக முக்கியமான காய்கறிகளை வளர்த்து வருகிறார்.
ஹாப் ஹூட்ஸ்
பீகார் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கராம்டிஹ் கிராமத்தை சேர்ந்தவர் அம்ரேஷ் சிங் (Amresh Singh). இவருக்கு 38 வயதாகிறது. இவர் மாபெரும் முயற்சிகளை மேற்க்கொண்டு 2.5 லட்சம் ரூபாய் செலவில் ஹாப் ஹூட்ஸ் என்னும் தாவரத்தை வளர்த்து வருகிறார். சர்வதேச காய்கறி சந்தையில் மிகவும் விலை உயர்ந்த காய்கறிகளில் ஹாப் ஹூட்ஸ் முக்கியமான காய்கறியாகும். இது சர்வதேச காய்கறி சந்தையில் (International Vegetable market) 1 கிலோ சுமார் 85,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அம்ரேஷ் தனது நிலம் முழுவதும் இந்த காய்கறியை வளர்த்து வருகிறார். மேலும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் பயிரில் வருமானத்தை அதிகரிக்கவும் இராசயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை பயன்படுத்தாமலே இவற்றை அவர் வளர்க்கிறார்.
தனது நிலத்தில் சோதனை செய்து காய்கறிகளை வளர்த்து வரும் அம்ரேஷ் இதுப்பற்றி கூறும்போது “காய்கறி சாகுப்படியில் (Vegetable Cultivation) குறைந்தப்பட்சம் 60 சதவீதம் சாகுபடி நடந்துள்ளது” என கூறியுள்ளார்.
வேளாண் விஞ்ஞானியான டாக்டர் லால் மற்றும் அம்ரேஷ் ஆகியோரின் வழிக்காட்டுதலின் கீழ் வாரணாசியில் இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் ஹூமுலஸ் லுபுலஸ் என அழைக்கப்படும் ஹாப் ஹூட்ஸ்களை பயிரிட்டு வளர்த்து வருகின்றனர். இதை அறிந்த அம்ரேஷ் அந்த தாவரத்தின் கன்றுகளை வளர்க்க கொண்டு வந்துள்ளார். இந்த தாவரத்தின் பூக்கள் பீர் தயாரிப்பில் முக்கிய பொருளாக உள்ளது. கிளைகள் மற்றும் தாவரத்தின் மற்ற பகுதிகள் உணவு மற்றும் மருந்துக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த அம்ரேஷின் விவசாய கதை மிகவும் பிரபலமடைந்தது. சமூக ஊடகங்களில் அவரது கதையை பகிர்ந்த பலரில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுப்ரியா சாஹூவும் ஒருவர் ஆவார். அவர் விவசாயியின் கண்டுப்பிடிப்பிற்காக அவரை மிகவும் பாராட்டினார்.
ஹாப் ஹூட்ஸ்கள் விவசாயியின் கடின உழைப்பால் ஒரு கிலோ ஹாப் ஹூட்ஸானது 1000 பவுண்டுகள் வரை விற்கப்படுகிறது. மேலும் இந்த காய்கறி காசநோய் மற்றும் அதன் அமிலங்களை கொல்லவும் புற்றுநோய் செல்களை (Cancer cells) கொல்லவும், லுகேமியா செல்களை தடுக்கவும் உதவக்கூடிய ஆண்டிபாடிகளை உருவாக்க உதவுகின்றன என சில அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த பயிர் ஒரு காலத்தில் இந்தியாவில் உள்ள இமாச்சல பிரதேசத்தில் பயிரிடப்பட்டது. ஆனால் விளைப்பொருட்களை சரியாக சந்தைப்படுத்த முடியாததால் அதை விற்பதில் சிரமம் இருந்தது. இதனால் இந்த பயிர் கைவிடப்பட்டது என்று அம்ரேஷ் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments