மக்கள்தொகை பெருக்கத்தால் நகரமயமாக்கல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சாலை விரிவாக்கம், குடியிருப்புகள் போன்ற பல்வேறு தேவைகளுக்காக அதிக அளவிலான மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் பிராணவாயு என்பது குறைந்து கொண்டே வருகிறது.
ஆக்ஸிஜன் தோட்டம் (Oxygen Garden)
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கஸ்தூரி பாட்டி (வயது 70), கடந்த 20 வருடங்களாக வீட்டு தோட்டத்தில் அசத்தி வருகிறார். இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய தாவரங்களை வளர்க்கும் விதமான முயற்சிகளை குடியிருப்போர் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கஸ்தூரி பாட்டி.
இதனை உணர்த்தும் விதமாக கோவையில் வீட்டிற்குள் வளர்க்கக்கூடிய, பிராண வாயுவை அதிகம் உற்பத்தி செய்யக்கூடிய செடிகளை அவர் கண்காட்சிக்கு வைத்துள்ளார். வீடு மற்றும் அலுவலகங்களில் அழகிற்காகவும், மன அமைதியை ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்படும் இந்த செடிகள் அதிக அளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் என்கிறார் அவர். இவரது இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருகிறது.
இவர் தன்னுடைய வீடு முழுவதும் பசுமை தோட்டமாக அமைத்துள்ளார். வீட்டு தோட்டம் அமைப்பதில் சிறந்து விளங்கியதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இவருக்கு இரண்டாவது பரிசையும் வழங்கி கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
பேரழிவுக்கான பாதை தான் பரந்தூர் விமான நிலைய திட்டம்: விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!
Share your comments