பயிர் பாதிப்பால் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள விவசாயிகளுக்கு இன்னும் ஒருவாரத்தில் இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விரட்டிய புயல்கள் (Chased storms)
தமிழகத்தில், டிசம்பர் மாதத்தில் வீசிய புயல்கள் காரணமாக, ஏழு லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட ஐந்து லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.600 கோடியை, இடுபொருள் நிவாரணமாக, அரசு அறிவித்தது.
இந்தத் தொகையில், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில், இதுவரை ரூ.543 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.எஞ்சியுள்ள தொகையை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கனமழை (Heavy rain)
இதற்கிடையே, ஜனவரியில் பல மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், 16.8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, ரூ.1,116 கோடியை, இடுபொருள் நிவாரணமாக, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை, வேளாண் துறை துவங்கியுள்ளது.இதற்காக, பயிர் பாதித்த விவசாயிகளின் பட்டியல் தயாரிப்பு பணிகள், சென்னையில் உள்ள வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன.
விரைவில் நிவாரணம் (Relief soon)
அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், வருவாய் துறை வாயிலாக, விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, நிவாரணம் வழங்கும் பணிகள் துவங்க உள்ளன.
இன்னும் ஒரு வாரத்தில், நிவாரணம் வழங்கி முடிக்கத் திட்டமிட்டுள்ளது என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
பயிர் காப்பீடு செய்ய அழைப்பு - திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தண்ணீருக்கு அடியில் திருமணம் - புதுமை செய்து அசத்திய சென்னை ஜோடி!
Share your comments