1. தோட்டக்கலை

கோடை காலம் வந்துவிட்டதா? இதை பயிரிடுங்கள், அதிக லாபம் பெறலாம்!

Poonguzhali R
Poonguzhali R
Grow It And You Can Make More Profit!

குறிப்பாகக் கடுமையான கோடைக் காலம் உச்சத்தில் இருக்கும் போது, தாவரங்களை வளர்ப்பது எளிதான காரியம் அல்ல. இருப்பினும், தாவரங்களை வளர்ப்பதற்கு பலவிதமான தீர்வுகள் இருக்கின்றன. கோடை உச்சத்தில் இருக்கும் மாதங்களில் நீங்கள் வளரக்கக்கூடிய சில தாவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தக்காளி


தக்காளி முதலில் மத்திய மற்றும் தென் அமெரிக்கா வழியாக வந்த தாவர வகையாகும். இப்போது உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது. இது சமைத்த மற்றும் பச்சையாகப் பல்வேறு வழிகளில் உண்ணப்படும் வகையாகும். 65 முதல் 85 டிகிரி பாரன்ஹீட் வரையிலான வெப்பநிலையில் தக்காளி செழித்து வளரும். இது உலகெங்கிலும் 7500 வெவ்வேறு வகைகளில் பயிரிடப்படுகிறது. மேலும் இது பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. கனமான களிமண்ணைத் தவிர்த்து, கிட்டத்தட்ட எல்லா வகையான மண்ணிலும் தக்காளியை வளர்க்கலாம். களிமண் தக்காளியை வளர்ப்பதற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

பீன்ஸ்


பீன்ஸ் வெப்பமான காலநிலையில் வளரும் தாவரம் ஆகும். அவை மிக நீண்ட காலமாக பயிரிடப்படுகின்றன. உலகில் சுமார் 40000 வகையான பீன்ஸ் வகைகள் உள்ளன. பொதுவாக அறுவடைக்கு முன் முழுமையாக முதிர்ச்சியடைய 60 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

இஞ்சி


இஞ்சி ஒரு வற்றாத வருடாந்திர தாவரமாகும். இது ஒரு மசாலா மற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை மே மாதத்தில் பயிரிடலாம் மற்றும் அறுவடைக்கு முன் முதிர்ச்சியடைய நான்கு முதல் ஆறு மாதங்கள் ஆகும். இஞ்சிச் செடி சராசரியாக 4-5 அடி உயரத்தை எட்டும். அதிகப் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் கொண்ட மென்மையான மண்ணைப் பயன்படுத்தி மிக உயர்ந்த தரமான இஞ்சியைப் பயிரிடலாம்.

கேப்சிகம்


குடைமிளகாய் என்று பரவலாக அழைக்கப்படும் கேப்சிகம் பல்வேறு வண்ணங்களில் காணப்படுகின்றன. இதன் விதைகள் மண்ணின் வெப்பநிலை 70-85 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் போது நன்றாக வளரும். ஆனால், மண்ணின் வெப்பநிலை 55 டிகிரி பாரன்ஹீட்டுக்குக் கீழே குறைந்தால் விதைகள் முளைக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவெ, கோடைக் காலத்தில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய தாவர வகைகளுள் இதுவும் ஒன்று.

மேலும் படிக்க

மாதம் ரூ. 1,82,200 சம்பளத்தில் வேலை: தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்!

TCS 2022: TCS பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! முன் அனுபவம் தேவையில்லை!!

English Summary: Is Summer Here? Grow It And You Can Make More Profit! Published on: 22 April 2022, 03:22 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.