கோடைகாலம் வந்துவிட்டாலே மாம்பழம், பலாப்பழம்தான் நம் நினைவிற்கு வரும். ஏனெனில், முக்கனிகளில் கடைசி இடம் பிடித்துள்ள வாழை எப்போதுமே நமக்கு மலிவான விலையில் கிடைக்கும்.
ஆனால் மற்ற இரண்டு பழங்களான இவை இரண்டுமே கோடை காலத்தில்தான் விற்பனைக்கு வரும்.
52 வாரங்கள்(52 Weeks)
அதனால், இந்த பருவத்தில், இவற்றை ருசிக்கத் தவறிவிட்டால், இன்னும் 52 வாரங்கள் காத்திருக்க நேரிடும். எனவே கோடையில் மா மற்றும் பலாப் பழத்தை மக்கள் ஈபோல் தொடங்கிவிடுவர்.
பலா சீசன் (Jackfruit seaso)
இந்நிலையில், பலாப்பழம் சீசன் நீலகிரி மாவட்டத்தில் தற்போதுக் களைகட்டிள்ளது. இந்த மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் தேயிலை உள்ளிட்ட விவசாய தோட்டங்கள் மற்றும் வீட்டு தோட்டங்களில் பலா மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. இங்கு தற்போது பலாப்பழ விளைச்சல் அமோகமாக உள்ளது.
சுற்றுலா பயணிகள் (Tourists)
விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த பலாப்பழங்களை அறுவடை செய்து கேரளா, கர்நாடகா செல்லும் சாலையோரங்களில் விற்பனைக்காக குவித்து வைத்து உள்ளனர்.
ஆனால் கொரோனாத் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், நீலகிரிக்குச் சுற்றுலா பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
விற்பனை பாதிப்பு (Sales impact)
இதனால் பலாப்பழங்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியிலேயே பலாப்பழம் சீசன் களை கட்டி விடும்.கூடலூர்,பகுதியில் காட்டுயானைகள் தொல்லையால் பலாப்பழங்களை பாதுகாக்க தனி கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
நல்ல விலை இல்லை (Not a good price)
இருப்பினும் விளைச்சலுக்கு ஏற்ப போதிய விலை கிடைப்பதில்லை. கோடை சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையைப் பொறுத்துப் பலாப்பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துவிட்டது. இதனால் பலாப்பழங்கள் மரங்களிலேயே பழுத்து வீணாகி விடுகிறது.
மேலும் பழங்களின் வாசனையை நுகரும் காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்து விடுகின்றன.
கொள்முதல் (Purchase)
எனவே வனத்துறையினர் விவசாயிகளிடம் இருந்து பலாப்பழங்களை நேரடியாகக் கொள்முதல் செய்து வனப்பகுதியில் வீசினால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது குறையும். இதன்மூலம் விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் நியாயமான விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதை அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க....
இயற்கை முறையில் வாழை சாகுபடி-என்னென்ன மருந்துகள் தேவை?
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments