நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், காய்கறி விவசாயிகள் பலர், இயற்கை விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாயமே பிரதானம் (Agriculture is the mainstay)
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது.
மலைக்காய்கறிகள் சாகுபடி (Cultivation of mountain vegetables)
விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிடுகின்றனர்.
தரிசாக விடப்பட்ட நிலம் (Barren land)
கடந்த சில மாதங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் நிலங்களை பதப்படுத்தி விவசாயம் மேற்கொள்ளாமல் தரிசாக விட்டு வைத்திருந்தனர்.
இயற்கை விவசாயம் (organic farming)
இந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு குறைந்து நல்ல சீதோஷ்ண காலநிலை நிலவி வருவதால், பதப்படுத்தி தயாராக வைத்திருந்த நிலங்களில் இயற்கை உரங்களை இட்டு மீண்டும் விவசாயம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் இயற்கை விவசாயத்திற்கு அவர்கள் மாறியுள்ளனர்.
இதுகுறித்து கோத்தகிரி பாண்டியன் பூங்கா பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் கூறியதாவது:-
2 மாதம் ஓய்வு (2 Months Rest)
பனிப்பொழிவின் காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால், கடந்த 2 மாதங்களாக விவசாயம் செய்யாமல் இருந்தோம். தற்போது நல்ல காலநிலை நிலவுவதால், மண்ணின் வளத்தைப் பாதுகாக்க வேண்டி, ரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களை வாங்கி விவசாயத்திற்குப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகிறோம்.
தோட்டக்கலைத்துறை சார்பில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மானியத்துடன் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
அஞ்சல் துறையில் வாகன ஓட்டுநராக விருப்பமா?- தகுதி 10ம் வகுப்பு மட்டுமே!
ஒரு கப் தேநீர் 1,000 ரூபாய் - இங்கில்லை, கொல்கத்தாவில்!
நல்ல வருமானத்தோடு பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டம் தான்!
Share your comments