இலைப் புள்ளி நோய் பாதிப்புக்குள்ளான மஞ்சள் பயிரில் இலைகளை அகற்றி தீயிட்டு அழிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக மஞ்சள் பயிரில் இலைப் புள்ளி, கருகல் நோய் ஆங்காங்கே பரவலாகத் தென்படுகிறது.
இதையடுத்து, பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய நோயியல் வல்லுநர் சங்கீதா பனிகர், தோட்டக்கலைத் துணை இயக்குநர் தமிழ்செல்வி, கொடுமுடி வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் ப. பிருந்தா ஆகியோர் வயல்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். அப்போது, நோயால் பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி தீயில் போட்டு அழிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மேங்கோசெப் 0.3 சதவீதம் (லிட்டருக்கு 3 கிராம்) அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு 0.3 சதவீதம் (லிட்டருக்கு 3 கிராம்)வீதம் 15 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து 3 அல்லது 4 முறை தெளித்து இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் படிக்க...
Share your comments