திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.
உயிர் உர உற்பத்தி மையம் (Bio-fertilizer production center)
மாநில அரசின் வேளாண்துறை சார்பில், அவிநாசியில், உயிர் உர உற்பத்தி மையம் செயல்படுகிறது. இங்கு, நெல், நிலக்கடலை உட்பட அனைத்து பயறு வகை பயிர் விளைச்சலுக்குத் தேவையான, திட வடிவிலான தழை மற்றும் மணிச்சத்து உரம், உற்பத்தி செய்யப்படுகிறது.
உரம் தயாரிப்பு (Compost preparation)
விளைச்சலுக்குத் தேவையான, திட வடிவிலான தழை மற்றும் மணிச்சத்து உரம், உற்பத்தி செய்யப்படுகிறது.இவை இங்கிருந்து, சேலம், கோவை, திருப்பூர், கரூர், பெரம்பலுார் மாவட்ட வேளாண் துறைக்கு சப்ளை செய்யப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் மானிய விலையில், இவை, விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
ரூ.1.27 கோடி ஒதுக்கீடு (An allocation of Rs. 1.27 crore)
இங்கு ஆண்டுக்கு, 250 டன் உரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டாக இலக்கை தாண்டி உற்பத்தி செய்யப்படுகிறது. திரவ வடிவ உயிர் உரம் தயாரிக்கும் கட்டமைப்பு ஏற்படுத்த, 1.27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, உபகரணங்கள் வந்து இறங்கியுள்ளன.
நீர் பாசனத்துடன் உரம் (Fertilizer with water irrigation)
இது தொடர்பாக அலுவலர்கள் கூறுகையில், இயந்திர உதவியுடன், தானியங்கி முறையில், திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப்படும். அதன் தரம், நுாறு சதவீதம் உறுதி செய்யப்படும்.
சொட்டு நீர் பாசனத்துடன், இந்த உரத்தைச் சேர்த்து செலுத்த முடியும் என்பதால், மருந்து வீணாகாது, மகசூலும் அதிகம் கிடைக்கும். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்தும், தழை, மணிச்சத்து இணைந்தும் என, நான்கு வகையில் உரம் தயாரிக்கப்பட உள்ளது.
ஏப்ரலில் உற்பத்தி (Prodution in April)
அண்மை காலமாக உயிர் உர பயன்பாட்டில், விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், திரவ உயிர் உரம், விவசாயிகளுக்கு அதிக பலன் தரும். இம்மையத்தில், வரும், ஏப்ரல் மாதம் முதல் திரவ உயிர் உர உற்பத்தியைத் துவக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க...
சூரியசக்தியால் இயங்கும் மின்வேலி, பம்ப்செட்டுக்கு மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!
நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
Share your comments