1. தோட்டக்கலை

சாகுபடி செலவைக் குறைக்கும் திரவ உயிர் உரங்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Liquid bio-fertilizers to reduce the cost of cultivation - Agricultural instruction!

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சாகுபடி செலவைக் குறைத்து கூடுதல் லாபம் பெற திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தலாம் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

உயிர் உரங்கள் (Bio-fertilizers)

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகை பயிர்கள் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, நஞ்சு உள்ள உணவு உற்பத்தியை மட்டும் தான் பெருக்க முடிகிறது. மேலும் சுற்றுப்புறச் சூழலும் பாதிக்கப்படுகிறது.

ஆனால் உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு, அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பு அளிக்கிறது.

உர உற்பத்தி மையம் (Fertilizer Production Center)

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் வட்டாரத்தில் குடுமியான்மலையில் திரவ உயிர் உர உற்பத்தி மையம் இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் திரவ யிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு புதுக்கோட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

7 வகை உரங்கள் (7 types of fertilizers)

இந்த மையத்தில் அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ் பைரில்லம் (இதரம்), ரைசோபியம் (பயறு) ரைசோபியம் (கடலை) பாஸ்போபாக்டீரியா, திரவ அசோபஸ் மற்றும் திரவ பொட்டாஷ் என 7 வகையான திரவ உயிர் உரங்கள், அனைத்து பயிர்களுக்கும் பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

உயிர் உரங்களை பயன்படுத்துவதால் ரசாயன உரங்களின் பயன்பாடு 20 முதல் 25 சதவீதம் வரை குறைவதோடு, கூடுதல் லாபமும் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது.

திரவ வடிவில் பாக்கெட்டுகளில்


திரவ உயிர் உரங்கள் பல்வேறு அளவுகளில் பிரத்யேகமான கொள்கலன்களில் விநியோகம் செய்யப்படுகின்றன. உயிர் உரங்கள் பாக்கெட்டுகளில் திடவடிவில் விநியோகிக்கப்படுகிறது. அதனை 6 மாதங்கள் வரைமட்டுமே திறன்மிகு நிலையில் பயன்படுத்த இயலும். அதன் பிறகு நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி விடும்.

உயிர் உரங்கள் (Bio-fertilizers)

ஆனால் திரவ உயிர் உரங்களின் ஆயுட்காலம் 12 மாதங்கள் ஆகும். மேலும் நுண்ணுயிரிகளின் அடர்த்தி திட உயிர் உரங்களை விட திரவ உயிர் உரங்களில் கூடுதலாகவும் இருக்கும். அகில இந்திய அளவில் தமிழகத்தில் தான் முதன்முறையாகப் பாக்டீரியாவை பிரித்தெடுக்கும், இணை ஒட்ட திரவ வடிப்பான் என்ற தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

விதை நேர்த்தி (Seed treatment)

அசோஸ்பைரில்லம் உயிர் உரமானது நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, பருத்தி, மிள்காய் போன்ற பயிர்களுக்கும், ரைசோபியம் உயிர் உரமானது நிலக்கடலை, பயறு வகை பயிர்களுக்கு தழைச்சத்தை நிலைப்படுத்த உதவுகிறது.

திவரப் பொட்டாஷ் உரம் (Liquid Potash Fertilizer)

பாஸ்போபாக்டீரியா உயிர் உரமானது அனைத்து பயிர்களுக்கும் மணிச்சத்தை கரைத்து பயிருக்கு கிடைக்கச் செய்யவும், திரவ பொட்டாஷ் உயிர் உரத்தை, மண்ணில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து பயிருக்கு கிடைக்கச் செய்யவும் பயன்படுத்தலாம்.

உயிர் உரங்களின் நன்மைகள் (Benefits of bio-fertilizers)

உயிர் உரங்களை பயன்படுத்துவதால், பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மண்ணில் உயிரியல் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது. பயிர்களுக்கு வறட்சியை தாங்கி வளரும் சக்தியை அளிக்கிறது. மண் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை (Things to keep in mind)

  • அதேநேரத்தில், உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்கக் கூடாது.

  • உயிர் உரங்களைக் குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய ஒளிபடாமல் பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும்.

  • விதைகளைப் பூஞ்சானக் கொல்லியுடன் விதை நேர்த்தி செய்த பின்புதான் கடைசியாக உயிர் உரங்கள் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

  • எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் ரசாயன உரங்களைக் குறைத்து, உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி சாகுபடிச் செலவைக் குறைத்து நிகர லாபத்தை அதிகரிக்க வேண்டும்.

தகவல்

மா.பெரியசாமி

வேளாண்மை இணை இயக்குனர் (பொறு)

புதுக்கோட்டை.

மேலும் படிக்க...

டெல்லி விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் வரை நீடிக்க வாய்ப்பு!!

47-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம் - உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!!

விவசாயிகள் போராட்டம்: தமிழகத்தில் 81.20% மக்கள் ஆதரவு - சர்வே!!

 

English Summary: Liquid bio-fertilizers to reduce the cost of cultivation - Agricultural instruction! Published on: 26 June 2021, 05:34 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.