1. செய்திகள்

டெல்லியி விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் வரை நீடிக்க வாய்ப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் டிசம்பர் வரை தொடரும் என பாரதிய கிசான் யூனியனின் செய்தி தொடர்பாளருமான ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.

மகா பஞ்சாயத்துகள்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 100 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாய அமைப்புகளில் ஒன்றான பாரதிய கிசான் யூனியனின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், செய்தி தொடர்பாளருமான ராகேஷ் திகாயத். விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று மகா பஞ்சாயத்துகளை நடத்தி வருகின்றார்.

அந்தவகையில் மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்துகளை நடத்திய பின் நேற்று பிரயாக்ராஜ் வந்தார் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் இந்த புதிய வேளாண் சட்டங்கள் வர்த்தகர்களையும் அழித்து, சிறு வணிகங்களையும் மூடுவதுடன், சிறு தொழில் துறையையும் சீரழித்து விடும். மேலும் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

போராட்டம் டிசம்பர் வரை நீடிக்கும்

விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி போராட்டக்களத்திலேயே இருக்கப்போவதில்லை. மாறாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று இந்த சட்டங்களின் பாதகங்கள் குறித்து எடுத்துரைக்க இருக்கிறேன். எங்களின் போராட்டம் இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் வரை தொடர வாய்ப்பு இருக்கிறது என்றார்.

English Summary: Delhi farmers protest likely to last till December

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.