பருவம் தவறிய மழையால், இந்த முறை மாம்பழ விவசாயிகள் மகசூல் இழப்பைச் சந்திக்க நேர்ந்துள்ளது.
விதவிதமான மாம்பழங்கள் (Different types of mangoes)
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் மாம்பழ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் கொண்டுள்ளனர். இங்கு மல்கோவா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பசந்த், நடுச் சாலை, நீலா உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மாறுபட்ட பருவநிலைகளால் மகசூல் இழப்பை எதிர்கொள்ள நேர்கிறது.
பருவம் மாறிய மழை (Seasonal rains)
மழை பெய்ய வேண்டிய நேரத்தில் பனியும், பனி பெய்ய வேண்டிய நேரத்தில் மழையும் பொழிகிறது.
சாகுபடித் திட்டம் வீண் (Cultivation plan in vain)
மாறுபட்ட பருவநிலை காணப்படுவதால் சாகுபடி செய்வது என்பதைத் திட்டமிட முடியவில்லை.
பூக்கள் உதிர்ந்தன (The flowers fell off)
நடப்பு ஆண்டிலும் பருவம் தவறிப் பெய்த மழையால் பூக்கள் உதிர்ந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. உடுமலை பகுதியில் ஆண்டுக்கு 2 முறை மா அறுவடை மேற்கொள்ளும் அளவுக்கு காய்ப்பு இருக்கும். தற்போது ஒரே ஒரு முறையாகக் குறைந்துவிட்டது.
சந்திக்கும் சவால்கள் (Challenges to face)
காட்டுப் பன்றிகள், யானைகள் போன்ற வன விலங்குகளாலும், பூச்சித் தாக்குதலில் இருந்தும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
வருமானத்திற்காகக் காத்திருப்பு (Waiting for income)
பாதுகாப்பு, தொடர் பராமரிப்பு, கவாத்து பணிகளுக்கான செலவீனங்கள் என ஆண்டு முழுவதும் செலவு செய்து விட்டு வருமானத்திற்காகக் காத்திருக்கும் நிலையில் இருக்கிறோம்.
இழப்பீடும் இல்லை (There is no compensation)
காப்பீடு செய்த விவசாயிகளுக்குக் கூட இழப்பீடு கிடைக்கவில்லை.
கொரோனா ஊரடங்கால் மாம்பழங்களை வெளியூர்களுக்குக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
விவசாயிகள் கோரிக்கை (Farmers demand)
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மகசூல் இழப்பால், பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ளும் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!
மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!
தமிழகத்தில் முதல்முறையாக சீமைக்கருவேல செடிகளை அழிக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு!
Share your comments