புதுக்கோட்டை மாவட்டம், குன்றான்பார்கோவில் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நீர்ப்பாசன கருவிகள் வழங்கப்படுவதாக வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் கு.சுபாசாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
அதிக சாகுபடி (More cultivation)
நுண்ணீர்ப் பாசன முறையில் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிகளவு பரப்பில் சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது.
அதிக விளைச்சல் (High yield)
இதனால் நீர் விரயமாவது குறைவதோடு பயிருக்குத் தேவையான நீர் நேரடியாகப் பயிரின் வேர்ப் பகுதிக்குச் செல்வதால் பயிர் நன்கு செழித்து வளர்ந்து அதிக விளைச்சல் கொடுப்ப தோடு களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.
சரியான விகிதத்தில் (In the right proportions)
நீர்ப்பாசனம் செய்வதற்கான நேரமும் செலவும் குறைகிறது. சொட்டு நீர்ப் பாசனம் மூலம் உரமிடுவதால் பயிருக்குத் தேவையான நீரும் ஊட்டச்சத்துக்களும் சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் கிடைக்கப் பெறுகிறது.
நீர் வீணாகாது (Water is not wasted)
மேலும் நீர் மற்றும் உரங்கள் வீணாவது தடுக்கப்படுவதோடு அவற்றின் பயன் பாட்டுத் திறனும் அதிகரிக்கிறது.
பயறு வகைப் பயிர்களுக்குத் தெளிப்பு அல்லது மழைத்தூவுவான் போன்ற நுண்ணீரப் பாசனக் கருவிகளும், மக்காச்சோளம், கரும்பு, தென்னை போன்றவற்றின் பயன்பாட்டுத்திறனும் அதிகரிக்கிறது.
பயறு வகைப் பயிர்களுக்குத் தெளிப்பு அல்லது மழைத்தூவுவான் போன்ற நுண்ணீரப் பாசனக் கருவிகளும், மக்காச்சோளம், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்குச் சொட்டு நீர்ப் பாசனக் கருவிகளும் நிறுவிட அனுமதிக்கப்படுகிறது.
100% மானியம் (100% subsidy)
பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்புநீர் பாசனக் கருவிகள் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயி களுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
கணினிச் சிட்டா
-
அடங்கல்
-
ஆதார் அட்டை
-
நில வரைபடம்
-
குடும்ப அட்டை நகல்
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
-
மண் மற்றும் நீர்ப் பரிசோதனைச் சான்று
-
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான்று
எனவே இந்தத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியின் உதவி வேளாண்மை அலுவலர்களிடம் மேலே கூறிய ஆவணங்களைக் கொடுத்து நுண்ணீர்ப் பாசனக் கருவிகளை அமைத்துப் பயனடையலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!
Share your comments