வேளாண்மையில் விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது, பயிர்களில் தோன்ற கூடிய நோய்களும் பூச்சிகளும். நோய் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக அதிகமான பூச்சிகொல்லிகளையும் பூஞ்சாணக்கொல்லிகளையும் தெளிக்கிறார்கள்.
இதனால் உற்பத்தி செலவுகள் அதிகமாவதுடன் சூற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது.
எனவே நுண்ணுயிரிகளை பயன்படுத்தி எவ்வாறு நோய்களை கட்டுப்படுத்துவது என்பதைப் பார்க்கலாம்.
டிரைக்கோடெர்மா விரிடி (Trichoderma viride)
இது ஒரு பூஞ்சை வகை நுண்ணுயிரியாகும்.
கட்டுப்படுத்தும் நோய்கள்
பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் ஏற்படக்கூடிய வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்துகிறது.மேலும் பல பூஞ்சாண நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.
அளவு
விதைநேர்த்தி:
1கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவும்.
நேரடி வயலில் இடுதல்
ஏக்கருக்கு 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 25 கிலோ தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து இடவும்.
சூடோமோனஸ் புளூரசன்ஸ்(Pseudomonas fluorescens)
இது பாக்டீரியா வகையைச் சார்ந்த நுண்ணுயிரியாகும். இதுநெற்பயிரில் ஏற்படும் குலைநோய்,இலை உறை அழுகல் நோய்,இலை உறை கருகல் நோய்,பயறு வகைகளில் ஏற்படும் வாடல் நோய்,வாழை வாடல் நோய் மேலும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துகிறது.
விதை நேர்த்தி
1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவும்.
நேரடி வயலில் இடுதல்
1 கிலோ சூடோமோனஸை 25 கிலோ தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து இடவும்.
இலை வழி தெளித்தல்
0.2% கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்கவும்.
வேர் உட்பூசாணம்
இது ஒரு கூட்டுயிரி பூஞ்சையாகும். இது பயிர்களில் ஏற்படும் நாற்றழுகல் நோய் மற்றும் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்துகிறது.
அளவு
ஏக்கருக்கு 5 கிலோ வேர் உட்பூசாணத்தை 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து இடவும்.
பேசிலஸ் சப்டிலிஸ்(Bacillus subtilis)
இது பக்டீரிய வகை நுண்ணுயிரியாகும். இது
சாம்பல் நோய்,வேர் அழுகல், நாற்றழுகல், கிழங்கு அழுகல், வாடல் நோய் மேலும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
இலை வழி தெளித்தல்
ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
நேரடி வயலில் இடுதல்
ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து இடவும்.
தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
பூச்சிகளை விரட்டியடிக்கும் தாவரப் பூச்சிக்கொல்லிகள் - தயாரிக்கலாம் வாங்க!
சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்!
Share your comments