விவசாயத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில், நானோ யூரியாவை பிரபல இஃப்கோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
உரங்களின் தேவை (The need for fertilizers)
விவசாயத்தைப் பொருத்த வரை, நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காக்க உரங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இருப்பினும் அதனை அரசு விதிகளில் குறிப்பிடப்பட்டு அளவில் பயன்படுத்துவதை விவசாயிகள் கடமையாகக் கருத வேண்டியதும் கட்டாயம்.
மண்ணுக்கும், மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத நிலையில் உரங்களின் பயன்பாடு அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்.
நானோ யூரியா (Nano urea)
அந்த வகையில், தற்போது, யூரியாவின் பயன்பாட்டைக் குறைத்து மகசூலை அதிகரிக்கும் வகையில் வந்துவிட்டது நானோ யூரியா.
இந்தியாவில் வேளாண் பணிகளுக்கான உரங்களை அதிகளவு சந்தைப்படுத்தும் இஃப்கோ எனப்படும் இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு நிறுவனம், நானோ யூரியாவை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.
விரைவில் அறிமுகம் (Coming soon)
இஃப்கோ அறிமுகம் செய்யும் இந்த 300 மில்லி நானோ யூரியா 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
43 கிலோ யூரியாவுக்கு சமமானது (Equivalent to 43 kg of urea)
இந்த 600 மில்லி நானோ யூரியா விவசாயிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் 43 கிலோ யூரியாவுக்கு சமமானது. எனவே, விவசாயிகளுக்கு இந்த நானோ யூரியா மிகுந்த பயன் கொண்டதாக இருக்கும்.
செலவைக் குறைக்கும் (Reduce the cost)
விவசாயிகளுக்கான சாகுபடி செலவைக் குறைப்பதுடன், மகசூலையும் அதிகரிக்கும்.
இதுகுறித்து ரசாயனம் மற்றும் உருத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், 'இந்திய விவசாயத்தில் நானோ யூரியாவில் அறிமுகமானது, மிகப் பெரியத் திருப்புமுனையை ஏற்படுத்தும். இதனால் வழக்கமாகப் பயன்படுத்தும் யூரியாவின் அளவுக் கணிசமாகக் குறையும்.
அரசுக்கு சேமிப்பு (Savings to the state)
விவசாயிகளின் உர மானியத்திற்கு வழங்கப்படும் மிகப்பெரிய அளவிலானத் தொகையும், அரசுக்கு சேமிப்பாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!
பருவம் தவறிய மழையால் பாதித்தது முந்திரி விவசாயம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
Share your comments