1. தோட்டக்கலை

பயிரின் வளர்ச்சிக்கும், மகசூலுக்கும் வித்திடும் இயற்கை கலப்பு உரம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Natural mixed fertilizer for crop growth and yield!

பயிர்கள் நன்கு வளரவும், நல்ல மகசூலையும் கொடுக்க இயற்கை கலப்பு உரம் உதவுகிறது. செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும், இந்த இயற்கை கலப்பு உரம் (Natural Mixed Fertilizer) வித்திடுகிறது.

இயற்கை கலப்பு உரம் தயாரிப்பு (Preparation)

தேவையான பொருட்கள் (Ingredients)

நாட்டு மாட்டுச்சாணம் - 1 டன்
ஆட்டுப்புழுக்கை          - 1 டன்
எரு                               - 1 டன்
இலைத்தழைகள்          - 1 டன்

செய்முறை (Method)

  • இவை அனைத்தையும் சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • இவற்றை ஒவ்வொன்றாகக் கலந்து நிலத்தில் இடலாம்.

  • இத்துடன் மக்கும் அனைத்து குப்பைகள், சமையலறைக் கழிவுகள், மக்கும் அனைத்துக் கழிவுகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

  • உழுவதற்கு முன்பு நிலத்தில் இட்டு பின் பயிரிடலாம்.

பயன்கள் (uses)

  • இந்த இயற்கை உரத்தை நிலத்தில் இடுவதால், மண்ணிற்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கப்பெறும்.

  • இதில் மக்கும் அனைத்து பொருட்களும் இடம்பெற்றிருப்பதால், பயிர்களுக்குத் தேவையான அனைத்து நுண்ணூட்ட மற்றும் பேரூட்டச் சத்துக்களும் எளிமையாகக் கிடைக்கும்.

  • இதனை மண்ணில் இடுவதால், பயிர்கள் நன்கு வளரும்.

  • பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்துப் பயிர்களை இயற்கை கலப்பு உரம் பாதுகாக்கிறது.

  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

மேலும் படிக்க...

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முக்கிய பயிருடன் கலப்பு பயிரிடுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!

தமிழக காய்கறிகளை திருப்பி அனுப்பும் கேரளா! - அதிக ரசாயன மருந்து பயன்படுத்தப்படுவதாக புகார்!!

வேளாண் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது!

English Summary: Natural mixed fertilizer for crop growth and yield! Published on: 29 March 2021, 07:50 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.