மனிதர்களின் வாழ்வியலோடு எப்போதுமே தாவரங்கள் அதாவது மரங்களின் பங்கு இன்றியமையாதது. பிறந்தபோதுத் தொட்டிலாக, இறந்தபோது பாடையாக எனத் வாழ்வின் தொடக்கம் முதல் முடிவுப்பரியந்தம் வரை நம்மோடு வருவது மரம்.
வேம்பு (Neem)
அத்தகைய மரங்களில் மிகவும் முக்கியமானது என்றால்,அது வேப்பமரம்தான்.
இது நமக்கும் மட்டுமல்ல, விவசாயத்திற்கும் இன்றிமையாததாகவே இதுநாள்வரைக் கருப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக வேளாண்மையில் வேம்பு மற்றும் அதனை சார்ந்த இலை மட்டை மற்றும் வேப்பங் கொட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆல்கலாய்டுகள் (Alkaloids)
-
வேப்ப இலையில் 10 ஆல்கலாய்டும், வேப்ப பட்டையில் 8 வகையான ஆல்கலாய்டுகளும், வேப்பங் கொட்டையில் 18 வகையான ஆல்கலாய்டுகளும் உள்ளன.
-
இன்றைய கால கட்டத்தில் இயற்கை வேளாண்மையில் முக்கிய பூச்சி நோய் தாக்குதல் கட்டுப்படுத்த கூடியப் பொருளாக வேப்பங்கொட்டைப் பயன்படுகிறது.
-
கடைகளில் விற்கப்படும் வேப்ப எண்ணெய், இரும்புச் செக்கில் அரைக்கப்படுவதினாலும் வெப்பத்தாலும் ஆல்கலாய்டுகள் சிதைந்து விடுகின்றன.
-
இதில் உள்ள மிக முக்கியமான ஆல்கலாய்டு அசாடி ராக்டின்.
வேப்ப இலை (Neem leaf)
இது தானிய சேமிப்பில் அதிக அளவாக பயன்படுத்தப்படுகிறது. தானியங்களை அந்துப் பூச்சிப்போன்றப் பூச்சிகளிடம் இருந்து இயற்கையான முறையில் பாதுகாக்கிறது.
வேப்பம்பட்டை
இவற்றை நன்றாக இடித்து ஊற வைத்து பயிர்களின் மேல் தெளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், இலைச்சுருட்டுப் புழு மற்றும் சாறு ஊறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
வேப்பங்கொட்டை
-
இதனை நன்றாக அரைத்து மக்காச் சோளத்தில்ப், படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 100 கிலோ வீதம் பயன்படுத்தலாம்.
-
வேப்பங்கொட்டைக் கரைசலைப் பயிருக்கு தெளிக்கும் போது, வேப்பின் வாசனை, பூச்சிகளை விரட்டும். கசப்பான சுவையால் பூச்சி கள் இலைகளைச் சாப்பிடாது.
-
இதை மீறிப் பூச்சிகள் உண்டால் வயறு மந்தம் ஏற்பட்டு பலவீனமான காணப்பட்டு இறந்து விடுகின்றன.
-
எனவே விவசாயிகள் அனைவரும் அவரவர் சாகுபடிகேற்ப வேப்பம் முத்துக்களைக் கைஇருப்பில் வைத்திருப்பது மிக மிக அவசியம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ரூ.17,000 மானியம் (Rs 17,000 grant)
அதிக அளவிலான நிலங்களைக் கொண்ட விவசாயிகள் வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் மானியத்திட்டத்தில் இணைந்து, வேப்பங்கன்றுகளை நடவு செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு மானியமாக ரூ.17,000 வழங்கப்படுகிறது.
சாகுபடிக்காகச் செய்யும் செலவில் முக்கிய செலவு, பூச்சி மருந்து
தெளித்தல், வேப்ப கொட்டையாக இருந்தால் இந்த வகையான செலவு குறையும். இதனை உணர்ந்து கொண்டதாலேயே தற்போது விவசாயத்தில், வேம்புவின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.
தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
Share your comments