பருப்பு வகைகளின் விலை உயர்வைத் தடுக்கும் வகையில் அவற்றை இருப்பு வைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
செயற்கையானத் தட்டுப்பாடு (Artificial scarcity)
இந்தியாவைப் பொறுத்தவரை,இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பருப்பு மற்றும் காய்கறிகளுக்கு செயற்கையானத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர்.
அதிக லாபம் (more profit)
இதன் மூலம் அதிக விலைக்கு, இந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்ட முயற்சி மேற்கொள்வது அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது.
புதியக் கட்டுப்பாடுகள் (New restrictions)
இதனைக் கருத்தில் கொண்டு, பருப்பு வகைகளின் விலை உயர்வைத் தடுக்கும் வகையில் அவற்றை இருப்பு வைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
200 டன்னுக்கு மேல் (More than 200 tons)
மொத்த விற்பனையாளர்கள் எந்த குறிப்பிட்ட ஒரு பருப்பு வகையையும் 200 டன்னுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது.
5 டன்னுக்கு மேல் (More than 5 tons)
சில்லறை விற்பனையாளர் எந்த பருப்பையும் 5 டன்னுக்கு மேல் இருப்பு வைத்திருக்கக் கூடாது. ஆலை உரிமையாளர்கள் தங்கள் ஆலையில் ஆண்டுதோறும் கையாளப்படும் பருப்பின் அளவில் 25 சதவீதத்துக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது.
இறக்குமதியாளர்கள் (Importers)
இறக்குமதியாளர்களைப் பொறுத்தவரை, அவர்களும் 200 டன்னுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது. மே 15ம் தேதிக்கு பிறகு இறக்குமதி செய்யப்பட்ட பருப்புகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
இணையதளத்தில் பதிவு (Register on the website)
-
குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு மேல் பருப்பு வகைகளை இருப்பு வைத்திருந்தால் அதனை நுகர்வோர் விவகாரத் துறை இணையதளத்தில் பதிவு செய்து இருப்பு விவரத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.
-
அதில் இருந்து 30 நாள்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருப்பைக் கொண்டு வந்துவிட வேண்டும்.
அரசு நடவடிக்கை (Government action)
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனைப் பயன்படுத்தி மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பருப்பு இருப்பை அதிகப்படுத்தி, தேவைக்கு ஏற்ப விநியோகிக்காமல் செயற்கையான விலை ஏற்றத்தை உருவாக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
அக்டோபர் வரை (Until October)
பாசிப் பருப்பு தவிர மற்ற வகை பருப்புகளுக்கு அக்டோபர் வரை இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும். இந்தக் கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!
2020 ஆம் ஆண்டில் 4-இல் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: யுனிசெப் தகவல்
Share your comments