1. தோட்டக்கலை

கிளிகளிடம் இருந்து பயிர்களைக் காக்க நைலான் வலை- விவசாயி புதிய யுக்தி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Nylon web to protect crops from parrots - Farmers' new tactic!
Credit : You tube

கோவையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மக்காச்சோளக் கதிர்களை கிளிகளிடம் காப்பதற்காக, நைலான் வலை அமைத்து, புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அறுவடையாகும் மக்காச்சோளம் (Harvesting corn)

கோவையில் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளத்துக்கு கடந்த ஆண்டு, குவிண்டாலுக்கு, 1,800 ரூபாய் வரை விலை கிடைத்தது. ஒரு ஏக்கர் மக்காச்சோள தட்டு மூலம், 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.

தொண்டாமுத்துார் வட்டாரத்தில் மட்டும், கடந்த செப்., மாதத்தில், 500 ஹெக்டருக்கும் அதிகமாக மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது.கதிர்கள் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

கிளிகளால் தொல்லை (Harassment by parrots)

ஆனால், கூட்டமாக வரும் கிளிகள், கதிர்களை கொத்தி தின்றும், வீணடித்தும் நாசம் செய்கின்றன. இதை தடுக்க எண்ணிய முட்டத்துவயல் விவசாயியான விஜயகுமார், , நைலான் (Nylon)கொண்டு தயாரிக்கப்பட்ட வலையைப் பயன்படுத்துகிறார். அதனால் பாதிப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

கிளிகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது குறித்து, விவசாயி விஜயகுமார் கூறியதாவது:

  • மக்காச்சோளம் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு, 30 ஆயிரம் வரை செலவிட வேண்டியுள்ளது.

  • அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த, இரண்டு முறை மருத்து அடிக்க வேண்டியுள்ளது. இது போன்ற நிலையில், பறவைகளால் சேதம் அதிகளவில் ஏற்படுகிறது.

  • குறிப்பாக, கூட்டமாக வரும் கிளிகளாலேயே சேதம் அதிகம்.

  • ஆனால் அதற்காக தோட்டத்தில், 24 மணி நேரமும் காவலுக்கு இருக்க முடியாது.

  • அதனால், சோதனை முயற்சியாக கிளிகளால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளை தேர்வு செய்து, நைலான் வலை அமைத்தேன். நல்ல பலன் கிடைத்துள்ளது.

  • ஒரு ஏக்கருக்கு, நைலான் வலை அமைக்க, ஏழு ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. எனவே அரசு மானியம் வழங்கினால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும்18ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை - பி.ஆர் பாண்டியன்!!

மகசூல் அதிகரிக்க உதவும் தேனீ வளர்ப்பு-ஒரு நாள் சிறப்பு பயிற்சி

மினி பட்ஜெட்டில், மெகா வருமானம் தரும் பெண்களுக்கான தொழில்கள்- முழுவிபரம் உள்ளே!

English Summary: Nylon web to protect crops from parrots - Farmers' new tactic! Published on: 15 December 2020, 08:24 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.