விருதுநகர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைப் பருவத்தில் இருப்பதால், உடனடியாக அறுவடை செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
4,500 எக்டேரில் சாகுபடி (Cultivated on 4,500 hectares)
விருதுநகர் மாவட்டத்தில் சில இடங்களில், விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது. குறிப்பாக இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டாரங்களில் கோடை பருவத்தில் நெற் பயிர்கள் சுமார் 4,500 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அறுவடைக்குத் தயார் (Ready to harvest)
அவை நன்கு வளர்ந்து, தற்போது இப்பயிர்கள் அறுவடை பருவத்தில் உள்ளதால், விவசாயிகள் அறுவடை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையங்கள் (Paddy Procurement Stations)
கோடைப் பருவ நெல் சாகுபடியைக் கருத்தில் கொண்டு, விவசாயிடமிருந்து நெல்கொள்முதல் செய்ய ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் (நெல் கொள்முதல்)
இதன்படி தேவதானம், சேத்தூர் கம்மாபட்டி, இராமசாமியாபும், கான்சாபுரம், வத்திராயிருப்பு ஆகிய ஆறு இடங்களில் 31.05.2021 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மழைக்கு வாய்ப்பு (Chance of rain)
தற்போது விருதுநகர் மாவட்ட எல்லைப் பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தென்மேற்கு பருவ மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் அறிவுறுத்தல் (Instruction of officers)
எனவே விவசாயிகள் அனைவரும் தாங்கள் பயிரிட்டுள்ள அறுவடை பருவத்தில் உள்ள நெற் பயிர்களை விரைந்து அறுவடை செய்து, சேதத்தினை தவிர்த்திடுமாறு விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ச.உத்தண்டராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!
அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!
Share your comments