இராமநாதபுரத்தில் நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களின் வாடகை இரு மடங்காக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
நெல் சாகுபடி (Paddy Cultivation)
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, எஸ்.புல்லந்தை நோம்பக்குளம், இலந்தைகுளம், கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்கதிர்கள் நன்கு வளர்ந்துள்ள நிலையில், தற்போது கதிர் அறுக்கும் இயந்திரங்களின் மூலம் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
8 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூலியாட்கள் மூலம் கதிர் அறுத்து வந்தனர்.பின்னர் திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கதிர் அறுக்கும் இயந்திரங்களை,விவசாயிகள் சேர்ந்து வரவழைத்து தங்களுடைய நிலங்களில் கதிர் அறுத்து வருகின்றனர்.
மழையால் பாதிப்பு (Damage by rain)
இந்தாண்டு எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக மழைப்பொழிவு இருந்ததால் பெரும்பாலான நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்தன.மழை நீரால் பாதிக்கப்படாத நெல் வயலில் தற்போது நெற்கதிர் அறுவடை நடந்து வருகிறது.
இருமடங்கு உயர்வு (Twice the increase)
இந்நிலையில், நெல் அறுவடை இயந்திர வாடகை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இயந்திரம் மூலம் அறுவடை செய்ய ஒரு மணி நேரத்திற்கு ரூ. 300 வீதம் கட்டணம் வசூல் செய்தனர். இந்த ஆண்டு மணிக்கு ரூ. ஆயிரத்து 600 வீதம் வசூல் செய்கின்றனர்.
நிர்பந்தம் (Compulsion)
ஒரு ஏக்கருக்கு பத்தாயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ள நிலையில் இயந்திரத்தின் வாடகை இரு மடங்காக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
அதேநேரத்தில் அறுவடை செய்ய வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் இருப்பதால், சொல்கின்ற வாடகைக்கு அறுவடை பணி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விவசாயத்திற்கு இலவச நீர் பாசன கருவிகள்- வேளாண் துறை அழைப்பு!
PM Kisan திட்டத்தில் விதிகள் மாற்றம் - விண்ணப்பதாரரின் பெயரில் நிலம் இருக்க வேண்டியது கட்டாயம்!
விவசாயத்திற்கு இலவச நீர் பாசன கருவிகள்- வேளாண் துறை அழைப்பு!
Share your comments