1. தோட்டக்கலை

நெற்பயிரைத் தாக்கும் குருத்துப்பூச்சி -கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Pest-bite control methods that attack rice!

நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை (Instructions) வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • குருத்துப் பூச்சிகளை கட்டுப்படுத்த நடவு செய்யும் போது நாற்றில் முட்டைக் குவியல்கள் உள்ள இலைகளின் நுனியை கிள்ளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

  • பாக்டீரியா இலைக் கருகல் நோய் இருப்பது தென்பட்டால் அந்த தருணத்தில் நுனியை கிள்ளுவது நல்ல முறை அல்ல. இதனைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்.

  • ஓர் ஏக்கருக்கு 20 - 25 பறவை குடில்கள் அமைக் வேண்டும்.

  • சூரிய வெளிச்சத்தில் இயங்கக்கூடிய தானியங்கி விளக்கு பொறியை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

  • இதேபோல் இனக்கவர்ச்சிப் பொறி வைத்தும், ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

  • இனக்கவர்ச்சிப் பொறிகளின் குப்பிகளை அவ்வப் போது மாற்றி அதன் தாக்குதலை குறைக்கலாம்.

  • டிரைக்கோ கிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 2 சிசி என்ற அளவில் நடவு நட்ட 30 மற்றும் 37வது நாள் (Day) வெளியிட வேண்டும்.

  • பொருளாதார சேத நிலையை தாண்டும் பட்சத்தில், ஒரு ஹெக்டேருக்கு கார்ட்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 % எஸ்.பி 1000 கிராம் அல்லது ஃப்ளூபெண்டியாமைடு 39.35% எஸ்.சி. 50 கிராம் அல்லது குளோர்பைரிபோஸ் 20% இ சி 1250 மில்லி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகிக்கலாம்

இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

மக்காச்சோளத்திற்கு காப்பீடு செய்ய அழைப்பு- விவசாயிகள் கவனத்திற்கு!

விலை மதிப்பற்றது வெங்காயம் - ஏன் தெரியுமா?

English Summary: Pest-bite control methods that attack rice! Published on: 03 November 2020, 06:58 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.