பூச்சிமருந்து மற்றும் பூஞ்சான மருந்துகள் மசோதா பயிருக்கு மருந்துகள் பாதுகாப்பான வகையில் கிடைப்பதை உறுதி செய்கிறது.
சட்ட மசோதா (Legal bill)
இந்தியாவில் தற்போது வேளாண்மை வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது அதன் காரணமாக மத்திய வேளாண் துறை அமைச்சரான தோமர் கடந்த மார்ச் மாதத்தில் இந்த சட்ட மசோதா
வை மாநிலங்களவையில் அறிமுக படுத்தினார்
1968யில் இயற்றப்பட்ட பூச்சிகொல்லி சட்ட த்திற்கு மாற்றாக இந்த சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது. ஆசியாவிலேயே பூச்சிமருந்து பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
மசோதாவின் நோக்கம் (The purpose of the bill)
பூச்சிமருந்து மற்றும் பூஞ்சான மருந்துகள் பாதுகாப்பான வகையில் கிடைப்பதை உறுதிப்படுத்துவது. இதுத் தவிர மனிதர்கள் மற்றும் விலங்குகள் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் தீங்குகளைக் குறைக்கும் நோக்கில் இந்த மசோதா ஏற்படுத்தப்பட்டது.
அதற்கான சரியான தயாரிப்பு, விற்பனை,இருப்பு, வினியோகம், ஏற்றுமதி, பயன்பாடு என அனைத்து நிலைகளிலும் கண்காணிக்கப்படுகின்றன
பூச்சிமருந்து தொடர்பான விளம்பரங்கள் கண்காணிக்கபடும். இதன் விளைவாக விவசாயக்கு தவறான உறுதி மொழிகள் தருவது தவிர்க்கப்படும்.
மாநில ,மாவட்ட அளவிலான கண்காணிக்க குழு அமைக்கப்படும்
இதில் விவசாய பிரதிநிதிகளும் இடம்பெற வழி வகுக்கப்பட்டு உள்ளன.
எதிர்ப்பு ஏன்? (Why the protest?)
இந்த சட்ட முன் வடிவு, சட்டமானால் பழைய சட்டத்தின் கீழான பதிவு செய்யப்பட்ட அனைத்து பூச்சி மருந்துகளும் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். அத்தகையப் பதிவுகள் அடுத்த 2ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், இந்த மசோதாவை, பூச்சிமருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் எதிர்க்கின்றன.
இயற்கை வேளாண்மை (Organic farming)
சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு
பிரச்சாரத்தை ஏற்படுத்துவதால், இயற்கை வேளாண்மைக்கு இது வழி வகுக்கும் என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. தரமான சூழலுக்கேற்ப பூச்சிமருந்து பயன்படுத்த இதில் வழி வகுக்கப்பட உள்ளன.
தகவல்
அக்ரி சு .சந்திரசேகரன்
வேளாண் ஆலோசனை
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
யாருக்கு இல்லை செல்ஃபி மோகம்- 140 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிர் தப்பிய அதிசயம்!
Share your comments