1. தோட்டக்கலை

நிதிப்பிரச்னையைத் தீர்க்கும் தாவரங்கள்- நவராத்திரியில் நட்டால் லாபம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Plants that will solve the financial problem - Profit if planted on Navratri!
Credit : Agriculture trip

நவராத்திரியில் இந்த செடிகளை வீட்டில் நட்டால் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும் என்று நம்பப்படுகிறது.

பண்டிகைக் காலம் (Festive season)

அக்டோபர் மாதம் வந்தாலே பண்டிகைகளும் வரிசைக் கட்டிக்கொண்டு நம்மை உற்சாகப்படுத்த வந்துவிடும். அந்த வகையில் தற்போது பண்டிகைக் காலத்தை நாம் அனுபவித்து வருகிறோம்.

அதிலும் தொட்டது துலங்கும் நவராத்திரிக் காலம் இது.இப்போது தொடங்கும் காரியங்கள் அனைத்தும் துலங்கும். இந்த நவராத்திரியில் இந்த செடிகளை நட்டு பணச்சிக்கலில் இருந்து விடுபடலாம் எனக் கூறப்படுகிறது.
அப்படி நம் பணக்கஷ்டத்தைப் போக்கும் செடிகள் எவை? இதோப் பட்டியல்.

துளசி (Basil)

இந்தச் செடி நட்டால், பணமாகக் காய்க்காவிட்டாலும், பணப்பிரச்சனை தீர்ந்தால் போதும் என்று தோன்றுகிறதா? இந்த நவராத்திரியில் அனைவரும் உங்கள் வீட்டில் சில செடிகளை நட்டு வைத்தால், அது பணப் பிரச்சனையை தீர்க்கும் என்பது ஒருபுறம் என்றாலும், மறுபுறம் சுற்றுச்சூழலுக்கும், நாம் சுவாசிக்கும் காற்றையும் சுத்தப்படுத்தும் அல்லவா?

நவராத்திரியின் போது வீட்டில் புதிதாக வைக்க உகந்ததாகக் கருதப்படும் சில தாவரங்கள் உள்ளன. இதில் மிகவும்  முக்கியமானது துளசி  செடி. துளசிச் செடியை நவராத்திரியின் போது வீட்டில்  நட்டால் அது செழிப்பைத் தரும் என்று நம்பப்படுகிறது. இதேபோல், வாழை, சங்கு புஷ்பம் போன்றவற்றை பயிரிடுவதும் நல்லது. வீட்டில் வைப்பதால் லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் பணப் பிரச்சனையும் இருக்காது.

துளசி செடிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. நவராத்திரியின் போது வீட்டில் துளசி செடியை பதியம் போட்டால் அன்னை மகாலட்சுமி மகிழ்ச்சி அடைவார் என்று நம்பப்படுகிறது. இது உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

விளக்கு அவசியம் (Lighting is essentia)

இந்தச் செடியை நட்ட பிறகு, ஞாயிறு மற்றும் ஏகாதசியைத் தவிர தினமும் தண்ணீர் ஊற்றவும். மேலும், மாலையில், துளசி செடிக்கு அருகில் கண்டிப்பாக விளக்கு ஏற்றவும்.

வாழை (Banana)

நவராத்திரியின் போது வாழைக் கன்றை நடவு செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. தண்ணீரில், சில துளிகள் பாலைக் கலந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் வாழை மரத்துக்கு விட்டு வந்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க...

குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!

கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!

English Summary: Plants that will solve the financial problem - Profit if planted on Navratri! Published on: 09 October 2021, 07:36 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.