திருச்சி சிறையில் கைதிகளால் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன. இதனை வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைதிகளுக்குக் கைத்தொழில் (Handcraft for prisoners)
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தண்டனை முடிந்து விடுதலையாகி செல்லும் கைதிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பல்வேறு வகையான கைத்தொழில் கற்றுத் தரப்படுகின்றன.
கைதிகளுக்கும் விவசாயம் (Prisoners Farming)
அவ்வகையில் சிறை வளாக நிலப்பரப்பில் வேளாண் தொழிலும் நடைபெறுகிறது.இங்கு சுமார் 24 ஏக்கரில் மா, பலா, வாழை, கொய்யா தென்னை , நெல், கரும்பு காய்களிகள், கீரை வகைகள் மட்டலை விளைவிக்கப்படுகின்றன.
8அடி வரை கரும்புகள் (8 Feet Sugarcane)
இவற்றில் கடந்த மார்ச மாதம் சுமார் 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பை, பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்தாண்டு முக்கால் ஏக்கர் மட்டுமே பயிரிட்ட நிலையில், இந்த முறை தேவை அதிகரிப்பைத் தொடர்ந்து 2 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் சுமார் 7 முதல் 8 அடி வரை செழிப்பாக வளர்ந்துள்ளன.
கரும்புக்கு முன்பதிவு(Advance booking for Sugarcane)
சில்லறை விலையில் ஒரு கரும்புக்கு ரூ.20ம் மொத்த விற்பனையில் ரூ.18ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரையில் சுமார் 900 கட்டுகளுக்கு ஆர்டர் பெறப்பட்டுள்ளது.
சிறை அங்காடியில் விற்பனைக்கு செய்யப்பட உள்ள இந்தக் கரும்புகளை பொது மக்கள் வாங்கலாம் என சிறைத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டைப்போல இந்த முறையும் சிறைக்கைதிகள் விளைவித்த கரும்பை வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!
Share your comments