தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விஞ்ஞானிகள் பங்கேற்பு (Participation of scientists)
பூச்சியியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில், வேளாண் விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தமிழக வேளாண் துறையைச் சேர்ந்த உயர்நிலை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் நீ.குமார் துவக்கி வைத்து பேசினார். அப்போது, பூச்சியியல் காரணமாக அதிகரித்து வரும் பிரச்னைகளின் பின்னணியில், பூச்சிக்கொல்லிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்துவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
பயிர் பாதுகாப்பு விஞ்ஞானிகள் (Crop protection scientists)
இந்த ஆலோசனையில் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் கீ.செ. சுப்பிரமணியன், பயிர் பாதுகாப்புத்துறை இயக்குநர் முனைவர் பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டு, 150க்கும் மேற்பட்ட பயிர் பாதுகாப்பு விஞ்ஞானிகள் ஆன்லைன் மூலம் உரையாற்றினர்.
தோட்டக்கலைத்துறை இயக்குநர் முனைவர் என். சுப்பையன் பங்கேற்று, தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துவதில், வேளாண் பல்கலைக்கழகத்தால் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டியதுடன், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயங்களுக்குத் தீர்வு கண்டு விவசாயிகளுக்கு உதவுமாறும் வலியுறுத்தினார்.
இந்திய மேயானர் ஆராய்ச்சிக் கழகம், திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர் கி.கு.ஷர்மா பேசுகையில், தேசிய அளவிலான கண்காணிப்பு முறைகள் மற்றும் சேர்க்கை தயாரிப்புகள் பற்றிய சீரான பார்வையின் அவசியம் குறித்து விளக்கினார்.
மேலும் படிக்க...
கோடைகாலத்தில் பயிரிட உகந்த பயிர்கள் எவை?
பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகள் நிறைவு! - விவசாயிகளின் உறுதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!
Share your comments