கோவை மாவட்டத்தில் அன்னுார் ஒன்றியத்தில் காய்கறி பயிரிடுவோருக்கு 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தலா ரூ.2 லட்சம் மானியம் (Rs.2 lakh subsidy each)
தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் அன்னுார் ஒன்றியத்தில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், காரேகவுண்டன் பாளையம் ஊராட்சிகளிலும், அன்னுார் பேரூராட்சியிலும், தலா இரண்டு லட்சம் ரூபாய் மானியத்தில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.
50% மானியம் (50% subsidy)
மேலும், நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க ஒட்டர்பாளையம், காரே கவுண்டன்பாளையம் ஊராட்சிகளில், நான்கு பேருக்கு, தலா, 50 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மண்புழு உர கூடாரம் (Earthworm manure tent)
கஞ்சப்பள்ளியில் நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைக்க, 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி,நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அவர் கூறியதாவது:
நீர் பாசனம் அமைக்க (Set up water irrigation)
நீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
காய்கறி பயிரிட்டால் (If growing vegetables)
காய்கறி பயிரிடுவோரை ஊக்குவிக்க, ஒரு எக்டருக்கு, 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
சான்று பெற உதவி (Amount for Certificate)
ரசாயனம் கலக்காமல், இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்க, அவர்கள் அங்ககச் சான்று பெற ஆகும் தொகை வழங்கப்படுகிறது.
மானியம் (Subsidy)
பண்ணைக் குட்டை, நீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் இதைப் பயன்படுத்தி பயன் பெறலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மதுபாலா, அனிஷா பேகம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ரவிக்குமார், கருப்பசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் படிக்க...
இயற்கை முறையில் வாழை சாகுபடி-என்னென்ன மருந்துகள் தேவை?
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments