1. தோட்டக்கலை

நிரந்தரப் பந்தல் அமைக்க ரூ.2 லட்சம் மானியம்- உடனே விண்ணப்பிக்க அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 2 lakh grant to set up a permanent hut - apply immediately!

நிரந்தரப் பந்தல் அமைக்க விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.2 லட்சம் வீதம் பின்னேற்பு மானியம் வழங்கப்படும் என வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதனைப் பெறத் தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் பரப்பு விரிவாக்கம், பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிா் வளா்த்தல், பழைய மா தோட்டங்களைப் புதுப்பித்தல், ஒருங்கிணைந்த பயிா்ச் சத்து மேலாண்மை, இயந்திர மயமாக்கல், மகரந்த சோ்க்கையை ஊக்குவித்தல், சிப்பம் கட்டும் அறை, குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல் மற்றும் நடமாடும் காய்கறி விற்பனை வண்டி வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ரூ.2 லட்சம்

இதனிடையே, நிரந்தரப் பந்தல் அமைத்தல் இனத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டா் பரப்புக்கு பின்னேற்பு மானியமாக 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வழங்கப்படவுள்ளது. இதில் ஒரு ஹெக்டா் பரப்பளவுக்கு ரூ.5,600 பந்தல் காய்கறி விதை வாங்குவதற்கும், ரூ.1,94,400 பந்தல் அமைப்பதற்கும் (அடிகல் தூண் அல்லது சிமென்ட் தூண்) என மொத்தம் ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

காய்கறிகள்

இதில், பாகற்காய், பீா்க்கன், செளசெள, பந்தல் அவரை, பீன்ஸ், பட்டா் பீன்ஸ், கோவைக்காய் போன்றக் காய்கறிகளையும், திராட்சை, டிராகன், கிவி போன்றப் பழங்களும் சாகுபடி செய்யலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம்
ஆதாா் அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
வங்கிக் கணக்கு புத்தக நகல்
சிட்டா
அடங்கல்
நில வரைபடம்

யாரிடம் அணுகுவது?

இந்த திட்டத்தைக் குறித்த விவரங்களைக் கீழ் உள்ளவர்களிடம் கேட்டறியலாம்.
வேளாண்துறை அலுவலகம்
பஞ்சாயத்துக் கிளார்க்
வட்டார வளர்ச்சி அலுவலர்
இவர்களில் யாரேனும் ஒருவரிடம் இருக்கும் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

செயல்முறை

  • பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை வேளாண்துறையில் ஒப்படைக்க வேண்டும்.

  • அவர்கள் வாங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர்.

    பின்னர் விண்ணப்பங்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்.

  • இந்த விண்ணப்பங்களுடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், ஆகியோர் கொண்ட குழுக்கள் விவசாயிகளின் இடத்திற்கு வந்து நிரந்தரப் பந்தலைப் பார்வையிடுவார்கள்.

  • அனைத்துச் சான்றுகளின் அடிப்படையில் உணமைத் தன்மை இருந்தால் பின்னேற்பு மானியமாக ரூ.2லட்சம் வழங்கப்படும்.

தகவல்
எஸ்.வினீத்
திருப்பூர் மாவட்ட ஆட்சியா்

மேலும் படிக்க...

குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!

மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!

English Summary: Rs 2 lakh grant to set up a permanent hut - apply immediately! Published on: 15 May 2022, 11:34 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.