நீங்கள் தக்காளி, அவரை மற்றும் கொடி வகைகள் பயிரிடும் விவசாயியாக இருந்தால் உங்களுக்கான சூப்பர் மானியம் இதுவாகும். வாருங்கள் என்னவென்று பார்க்கலாம்.
தக்காளி, அவரை மற்றும் கொடி வகைகள் பயிரிடும் விவசாயிகள், உடனே குறைந்த செலவில் மூங்கில் பந்தல் அமைக்க அரசு மானியம் பெறலாம். தக்காளி, அவரை மற்றும் இதர வகை கொடி வகைகளில் தற்காலிக மூங்கில் பந்தல் அமைக்க 50 சதவீத மானியமாக ரூ.25,000/- வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு இணையதள பதிவு அவசியமாகும் எனவே, இன்றே http://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/index.php என்ற இணையத்தளம் மூலம் பதிவு செய்து பயன்பெறுமாறு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை விவசாயிகள் பயன்பெறலாம்.
PMFBY திட்டம்: உடனே குறுவை பயிருக்கு காப்பீடு செய்யுங்க
• தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் (NADP)/ RashtriyaKrishiVikasYojana (RKVY) யின் முக்கிய நோக்கம், முக்கிய பயிர்களின் உற்பத்தித்திறனை மையப்படுத்திய தலையீடுகள் மற்றும் விவசாயிகளுக்கு அதிக வருவாயை அதிகரிப்பது ஆகும்.
• இத்திட்டம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 பகிர்வு முறையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
• 2022-23 ஆம் ஆண்டில், இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடுவதற்கும், முருங்கை, வெங்காயம், கீரைகள், டிராகன் பழங்கள், சிறு பழ பயிர்கள், பனை போன்ற தோட்டக்கலை பயிர்கள் பயிரிடுவதற்கும், நிரந்தர பந்தல் அமைப்பு அமைத்தல், வாழை கொத்து சட்டைகள் போன்றவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
• RKVY இன் கீழ் இரண்டு துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன:
1. கோக்கோ முந்திரி சாகுபடிக்கு ரூ.12,000 மானியம்: Apply Today!
2. சுவைதாளிதப் பயிர்களான மிளகாய், மிளகு, பட்டை, கிராம்பு போன்ற பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.20,000 வரை மானியம்!
மேலும் படிக்க:
PM Kisan திட்டம் பயன்பெற e-kyc புதுப்பிக்க காலக்கெடு தேதி அறிவிப்பு!
Share your comments