மத்திய அரசின் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள், விவசாய குழுக்கள், புதிதாக விவசாயம் செய்ய முன் வருவோரும் புதிய விவசாயிகள் என அனைவருக்கும் அவர்களின் நிலத்திற்கு ஏற்றாற் போல ஏக்கருக்கு, 2,500 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியம், மூன்று ஆண்டுகள் வரை தரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: PM Kisan ரூ.2000! வெளியான புதிய அப்டேட்!
நடப்பாண்டு இத்திட்டத்தை செயல்படுத்த, 6.51 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில், மத்திய அரசு 3.91 கோடி ரூபாயும், மாநில அரசு, 2.60 கோடி ரூபாயும் வழங்கி இருக்கின்றன.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புகின்ற விவசாயிகள், tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்து இருக்கிறது.
மேலும் படிக்க: புதிதாக வெளியாகும் கூட்டுறவு சங்கத்தின் கோ பஜார் செயலி!
வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறையின் கீழ் அறிவிக்கும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை சார்ந்த ஒருங்கிணைந்த திட்டங்கள் வருமாறு:
- சொட்டுநீர் பாசனம் அமைத்தல்
- நீர் ஆதாரங்கள் உருவாக்குதல்
- வீடுதோறும் பழச்செடி தொகுப்பு விநியோகம்
- நிரந்தர பந்தல் காய்கறி சாகுபடி ஊக்குவிப்பு
- பழப்பயிர் சாகுபடி ஊக்குவிப்பு
- பசுமை குடில் அமைத்தல்
- காளான் குடில் அமைத்தல்
- காய்கறி சாகுபடி ஊக்குவிப்பு
மேற்கண்ட திட்டங்களின் பயனை பெறுவதற்கு இணையதளத்தில் உழவன் செயலி மற்றும் https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/ -இல் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
காய்கறி பயிரிட மானியம்|புகையிலைக்கு மாற்றாக காய்கறி|ஏக்கருக்கு 8000 ரூபாய்!
மெக்கானிக் வேலை செய்வோர்களுக்கு அறிய வாய்ப்பு: Uzhavan App வரப்போகும் புதிய வசதி
Share your comments