திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் உள்ள வெள்ளகோவிலில் விவசாயிகளுக்கு மானியத்தில் மரக்கன்றுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புக்கும் மானியம் (Subsidy for maintenance)
விவசாயிகளுக்கு மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. அத்துடன் நில்லாமல், மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பு செய்வதற்காகத், தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7- வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
உதவி இயக்குனர் ஆலோசனை
இதுகுறித்து வேளாண் துறை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வனத்துறையும் இணைந்து வேளாண் விளை நிலங்களில் உற்பத்தியினை பாதிக்காத வகையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேக்கு மற்றும் செம்மரம் (Teak and sheep)
இந்தத் திட்டத்திற்காக மரக்கன்றுகளைப் பராமரிக்க மானியமும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் வெள்ளகோவில் வட்டாரத்திற்கு தேக்கு மற்றும் செம்மரம் கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு வழங்கும் மரக்கன்றுகளை பண்ணையை சுற்றிலும் வயல், வரப்புகள், பண்ணைக்குட்டைகள் அல்லது குறைந்த அளவு முறையில் விளை நிலங்களில் நடவு செய்யலாம்.
3 ஆண்டுகளுக்கு மானியம் (Grant for 3 years)
இதற்காக மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இவ்வாறு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பு செய்ய தொடர்ச்சியாக வரும் 3 ஆண்டுகளுக்கு மரக்கன்று ஒன்றுக்கு ரூ. 7- வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் பண்ணைப் பகுதியை ஆண்டு முழுவதும் பசுமையாக மாற்றுவதுடன், எதிர்காலத்தில் மரக்கன்றுகள் மூலமாக நல்ல லாபம் ஈட்ட வழிவகைப் பிறக்கிறது.
தொடர்புக்கு (Contact)
ஆகவே வெள்ளகோவில் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதிக்கு வரும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது வெள்ளகோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டு பயன்பெறலாம்.
மேலும் படிக்க...
பட்டுப்புழு வளர்க்க விருப்பமா?கருவிகள் வாங்க ரூ.52,500 வரை மானியம்!
நெல், வெங்காய பயிர்களுக்கு காப்பீடு- விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments