நெல் சாகுபடியில் விதை நேர்த்தி செய்வதன் மூலம் அதிக மகசூலும், கூடுதல் வருவாயும் ஈட்ட முடியும் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நெநல் சாகுபடியில் விதை நேர்த்தி செய்து அதிக மகசூல் பெறலாம்.
விதை நேர்த்தி(Seed treatment)
விதை நேர்த்தி என்பது விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்கவும் பயிர்களை நோய் மற்றும் பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கவும் உதவும்.
மேலும், விதைக்கும் முன்பு விதைகளை ரசாயன பூஞ்சான மற்றும் பூச்சிக்கொல்லிகள் அல்லது எதிர் உயிர் பூஞ்சானம் மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டு உயிர் உரங்களுடன் மேல் பூச்சு செய்வதே விதைநேர்த்தி ஆகும்.
விதைநேர்த்தியின் பயன்கள் (Uses of Seed Treatment)
விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கிறது.
விதை மற்றும் மண் மூலம் பரவும் பூஞ்சாண நோய்களை கட்டுபடுத்துகிறது.
பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கிறது.
விதை நேர்த்தியில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிரிகள் மண்ணிலுள்ள கனிமப் பொருட்களைப் பயன்படுத்தி பல மடங்காக பெருகி மண்ணின் வளம் கூடுகிறது.
பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் சத்துக்கு விவசாயிகள் அதிகளவில் ரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர். அதேநேரத்தில் விவசாயிகள் ரசாயன உரப் பயன்பாட்டைக் குறைத்து உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
உயிர் உரங்கள்(Bio-fertilizers)
யூரிய பயன்படுத்துவதற்கு பதிலாக டுசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை பயன்படுத்தலாம். இதனால் மண்டலத்தில் இருக்கும் நைட்ரஜன் சத்துக்கள் எளிதாக பயிரின் வேருக்கு கடத்தப்படும். பயிர்க்கு போதிய அளவு நைட்ரஜன் சத்துகிடைக்கும் அதேபோல் பாஸ்போபாக்டீரியா உயிர் உரத்தை பயன்படுத்தலாம். இதனால் நெல்லில் வேர் முடிச்சுகள் அதிகரிப்பதுடன் பயிரின் பச்சையம் குறையாமல் காக்கப்படும் உயிர் உரத்தால் மண்ணில் நுண்ணுயிர் களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும்.
நெல்லுக்கு ரசாயன உரத்தின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து உயிர் உரங்களை பயன்படுத்தலாம் ரசாயன உரம் பயன்படுத்தி 20 நாட்கள் கழித்து உயிர்உரங்கள் பயன்படுத்தலாம்.
சில ஆண்டுகளில் மண் உயிர் உரங்களுக்கு ஏற்றவாறு ரசாயன உரத்தை நிறுத்திக் கொள்ளலாம் அசோஸ்பைரில்லம் பாஸ்வாபாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்கள் திட நிலையில் 200 கிராம் பாக்கெட் ஆறு ரூபாய்க்கு வேளாண் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
தகவல்
எஸ். என்.செந்தில்நாதன்
வேளாண்மை உதவி இயக்குநர்
மேலும் படிக்க...
நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!
சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி!
Share your comments