துவரைக்கு அரசின் குறைந்த பட்ச ஆதார (Minimum Support Price) விலை 6,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கொள்முதல் (Purchase)
-
மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டு காரிப் பருவ காலத்தில் அறுவடை செய்யப்படும் துவரை விளைபொருட்கள் இந்தாண்டு, ஏப்ரல் 9ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படும்.
-
இந்த கொள்முதல், கரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
-
இந்தத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படவுள்ள துவரை நியாயமான சராசரி தரத்தின்படி இருக்க வேண்டும்.
-
விவசாயிகளால் கொண்டு வரப்படும் துவரை பயிரானது, இதர தானியங்களின் கலப்பு இல்லாமலும், சேதம் அடையாமலும், முதிர்வடையாத சுருங்கிய நிலையில் இல்லாமலும், வண்டுகள் தாக்காமலும் இருக்க வேண்டியது அவசியம்.
-
துவரையின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்கும் (Humidity) குறைவாகவும் இருக்க வேண்டும்.
-
இதுவரை விளைபொருளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை (MSP) குவிண்டாலுக்கு ரூ.6.000 எனக் கொள்முதல் செய்யப்படும்.
-
கொள்முதல் செய்யப்படும் துவரைக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
-
மேலும், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளின் சிட்டா அடங்கலில் துவரை சாகுபடி பரப்பளவு இடம் பெற்றிருக்க வேண்டும்.
-
வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல் ஆகியவ இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
-
எனவே, கரூர் மாவட்டம் அய்யர்மலை. இரும்பூதிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், மேற்பார்வையாளர் மற்றும் கிருஷ்ணராயபுரம் தாலுகா கீழபஞ்சம்பட்டி சீனிவாசன் தோட்டம் ஆகிய முகவரிகளில் சென்று விவசாயிகள் பயனடையலாம்.
-
இவ்வாய்ப்பினை துவரை பயிரிட்டுள்ள விவசாயிகள் பயன்படுத்தி தங்களது
-
விளைபொருட்களை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
சூரிய மின்வேலி அமைக்க 50% மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!
வட்டி இல்லாதக் கடன்- இந்த ஆப்-பில் உடனே கிடைக்கும்!
வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!
Share your comments