1. தோட்டக்கலை

மலர் சாகுபடி, மரக்கன்று வளர்க்கச் சிறப்புப் பயிற்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Special training in flower cultivation and sapling cultivation!
Credit: AgriFarming

குறுகிய கால மலர் சாகுபடி மற்றும் மரக்கன்று வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து கோவையில் உள்ள வனக்கல்லூரி சிறப்புப் பயிற்சி அளிக்கிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வனக்கல்லூரி ஏற்பாடு (Organized by the Forest College)

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வயதுவரம்பு (Age limit)

இந்த மலர்சாகுபடி மற்றும் மரக்கன்று வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் குறைந்ததது 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

பயிற்சிகாலம் (Training period)

மொத்தம் 6 நாட்கள். மாதத்தில் ஒரு நாள் என்ற வீதத்தில், ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.


பயிற்சிக் கட்டணம் (Fees)

இந்த பயிற்சிக்கு ரூ.2,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

களப்பயிற்சி (Field training)

இதில் வனவியல் விஞ்ஞானிகள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். இதுதவிரக் களப்பயிற்சியைம் அளிக்க ஏற்பாடு செய்து தரப்படும்.

சான்றிதழ் (Certificate)

பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

தொடர்புக்கு (For Contact)

மலர்சாகுபடி மற்றும் மரக்கன்று வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயனடைய விரும்புவோர், 9443505845, 98653 03506 போன்ற செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.41¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்!

இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி!

English Summary: Special training in flower cultivation and sapling cultivation! Published on: 13 April 2021, 07:58 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.