1. தோட்டக்கலை

கோடை உழவுக்கு மானிய விலையில் உரம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Subsidized fertilizer for summer plowing!

கோடை உழவுக்குத் தேவையான ரசாயன உரங்களை மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோடையில் உழவு செய்தல் மண்ணுக்குச் சிறந்த பலனைத் தரும். இந்நிலையில், கோடை உழவு குறித்து, திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குனர் பாண்டித்துரை தெரிவித்ததாவது:
மாவட்டத்தில் பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி, விவசாயிகள் உழவு மேற்கொள்ள வேண்டும்.

புழுக்கள் மற்றும் நோய்கள் (Worms and diseases)

இதன் மூலம் பயிரைத் தாக்கும் புழுப் பூச்சிகளின் கூட்டுப்புழுக்களையும், வேர் அழுகல், வாடலை உண்டாக்கும் பூஞ்சான வித்துகளையும் அழிக்கலாம்.

உரங்கள் கையிருப்பு (Fertilizer stock)

கோடை காலப் பருவ சாகுபடியில் ஏப்ரல் மாதத்திற்கு யூரியா, டி.ஏ.பி. பொட்டாஸ் காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் என 1310 டன்கள் தேவை உள்ளன. தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை தயார் நிலையில் நிலையங்களில் உரம் தேவையான அளவுக்கு வைக்கப்பட்டுள்ளன.

யூரியா 3800. டி.ஏ.பி 715 . பொட்டாஸ் 1900, காம்பளக்ஸ் 5100 மெட்டன்களும், சூப்பர் பாஸ்பேட் 600 என மொத்தம் 12115 டன்கள் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகிறது.

இவற்றை மானிய விலையில் பெற்று விவசாயிகள் பயனடையலாம். மானிய விலையில் உரங்களைப் பெற விவசாயிகள் தங்கள்  ஆதார் கார்டையை உர நிறுவனங்களிடம் சமர்க்க வேண்டியது அவசியம். 

மேலும் படிக்க...

நெல்மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க, சேற்றில் புரண்டு விவசாயி நூதன போராட்டம்!

விலை குறைவால், வேதனையுடன் தக்காளியை ஏரியில் கொட்டிய விவசாயிகள்!

நள்ளிரவில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை அறிய புதிய யுக்தி!

English Summary: Subsidized fertilizer for summer plowing! Published on: 17 April 2021, 10:20 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.