சேலம் மாவட்டத்தில் கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்பபட உள்ளதாக வேளாண்துறை அறிவித்துள்ளது.
இனிப்பாக இல்லை (Not sweet)
கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் வாழ்க்கை அவ்வளவு இனிப்பாக இல்லை என்பதால், தங்களுடைய நிதிச்சுமையைக் குறைக்க ஏதுவாக கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கூடுதல் மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுத் தொடர்பாக சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு பயிருக்குச் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.
100% மானியம் (100% subsidy)
சொட்டு நீர் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
ரூ.1 லட்சத்திற்கு மேல் (More than Rs.1 lakh)
-
கரும்பு பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு திறந்தவெளி கிணறு மூலம் மேற்பரப்பு சொட்டு நீர் பாசனக்கருவி அமைப்பதற்கு, வழக்கமான பயிர் மானியம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது.
-
தற்போது ரூ.1 லட்சத்து, 51 ஆயிரத்து 368 வழங்கப்பட உள்ளது. இதர விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 115 வழங்கப்பட உள்ளது.
மானியம் (Subsidy
ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேற்பரப்பு, சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியமாக ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 844 வழங்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required
-
சிட்டா
-
அடங்கல்
-
குடும்ப அட்டை நகல்
-
ஆதார் அட்டை நகல்
-
நிலவரைபடம்
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3
-
போட்டோக்கள்
முன்பதிவு அவசியம் (Booking is required)
சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் மேற்கூறி ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
ஆசிரியர் தொழிலுடன் சேர்த்து, தினமும் 8 கிலோ சம்பங்கி பூ சாகுபடி செய்து அசத்தும் பெண் விவசாயி!
Share your comments