1. தோட்டக்கலை

சூரியகாந்தியை சேதப்படுத்தும் கிளிகள்- விவசாயிகள் வேதனை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Sunflower-damaging parrots - Farmers in pain!

திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டாரத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள சூரியகாந்தி பூக்களை கிளிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பணப்பயிர் (Cash crop)

தமிழகத்தில் பணப் பயிர்களான எண்ணெய் வித்துகளைப் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

100 ஏக்கர் பரப்பில் (Covering an area of ​​100 acres)

குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஆமணக்கு, எள், சூரியகாந்தி ஆகியவை பயிரிடப்படுகின்றன. மானூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் வட்டாரங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சூரியகாந்தி பயிரிடப்பட்டு வருகிறது. மானூர் வட்டாரத்தில் கீழபிள்ளையார்குளம், தெற்கு செழிய நல்லூர், வடக்கு செழியநல்லூர், தென்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது.

கிளிகள் தொல்லை (Parrots harass)

கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு அதிக விவசாயிகள் சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர். ஆனால், கிளிகளால் சூரியகாந்தி பயிர்கள் சேதமடைவதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மானூர் சுற்று வட்டாரத் தில் நெல், சோளம், கம்பு, கத்தரி, வெண்டை, பருத்தி ஆகியவை மட்டுமே பயிரிடப்பட்டு வந்தன.

தண்ணீர் (Water)

இதில் சிற்றாறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ள எங்களது பகுதிகளில் பாசனக் கிணறு களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும். அதன் மூலம் தோட்டப் பயிர்கள் சிறப்பாக இருந்தன.

மலர் சாகுபடி (Flower cultivation)

வருவாயைக் கருத்தில் கொண்டு சிலர் மலர் சாகுபடிக்கு மாறினர். கேந்தி, கோழிக் கொண்டை, பிச்சி, மல்லித் தோட்டங்கள் இப்போது அதிகளவில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக புதிய முயற்சியாக சூரியகாந்தி, எள் போன்ற எண்ணெய்வித்து பயிர்களுக்கு விவசாயிகள் மாறியுள்ளனர். மானாவாரியில் எள்ளும், கிணற்றுப் பாசனப் பரப்புகளில் சூரியகாந்தியும் பயிரிட்டுள்ளோம்.

பருவம் (Season)

சூரியகாந்தியைப் பொருத்தவரை மானாவாரியாக ஆடி, கார்த்திகை பட்டங்களிலும், இறவையில் மார்கழி, சித்திரைப் பட்டங்களிலும் பயிரிடப்படுகிறது.

45 நாட்களில் (In 45 days)

நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகையும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் பூமியில் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கும். மானாவாரி நிலங்களில் ஏக்கருக்கு 7 கிலோவும், இறவை நிலங்களில் ஏக்கருக்கு 6 கிலோ விதையும் தேவைப்படுகிறது. செடிகள் ஊன்றப்பட்டு அதிகபட்சம் 45 முதல் 60 நாள்களுக்குள் பூக்கத் தொடங்கிவிடும்.

ரகங்கள்

இதுகுறித்து செழியநல்லூரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளிகள் கூறுகையில், சூரியகாந்தி சாகுபடி குறித்து இம்மாவட்டத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை. சூரியகாந்தியில் கோ. 4, மார்டன், கே.பி.எஸ்.எச்.1, கே.பி.எஸ்.எச்.44 உள்பட 8க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன.

புரிதல் இல்லை (No understanding)

இவற்றில் நமது மாவட்டத்துக்கு ஏற்றவை எவை என்பது குறித்த புரிதல் விவசாயிகளிடம் இல்லை.

சூரியகாந்தியில் கம்பளிப்பூச்சி, இலைத்தத்துப் பூச்சி, புகையிலைப்புழு, துரு நோய் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

கிளிகள் தொல்லை (Parrots harass)

  • செழியநல்லூர் பகுதியில் சூரியகாந்தி பயிர்களுக்கு கிளிகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • மாலை 4 மணிக்குப் பின்பு 50க்கும் மேற்பட்ட கிளிகள் வந்து மலர்ச்சியோடு இருக்கும் பூக்களின் விதைகளைத் தின்றுவிடுகின்றன.

  • விதைகளே எண்ணெய்க்கு ஆதாரம். பூக்களில் விதைத் திரட்சி இல்லையெனில் அதிக விலை கிடைக்காது.

விரட்டும் பணி (The task of driving)

இதனால்  கிளிகளிடமிருந்து சூரியகாந்தி பயிர்களைக் காப்பாற்ற மிகவும் சிரமமாக உள்ளது. தினமும் 4 விவசாயத் தொழி லாளர்களைப் பணிக்கு அமர்த்தி மாலை முதல் இரவு 7 மணி வரை டமாரம் கொண்டும், பட்டாசுகளை வெடித்தும் ஒலி எழுப்பி கிளிகளை விரட்டி வருகிறோம்.

சிறிது நேரம் கண் அசந்தாலும் கிளிகள் வந்து விதைகளைத் தின்றுவிடுகின்றன.
அறுவடைக் காலத்தில் சூரிய காந்தியால் கிடைக்கும் லாபத்தை கிளிகள் அபகரிப்பது கவலையை ஏற்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக இப்பிரச்னை தொடர் கிறது. எனவே இந்த பிரச்னைக்கு தீர்வு காண தோட்டக்கலைத் துறை, வனத் துறை இணைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று மீண்டும் டிராக்டர் பேரணி!!

ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!

வயல்களில் பதுங்கியுள்ள எலிகள்- தந்திரமாகக் கையாள்வது எப்படி!

English Summary: Sunflower-damaging parrots - Farmers in pain! Published on: 29 June 2021, 11:00 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.