1. தோட்டக்கலை

கொட்டும் மழையில் மிளகு- வாழை மரத்தை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
pepper-banana tree

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமெடுத்துள்ள நிலையில் தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் பயிர்கள் கனமழையால் சேதமடைவதோடு மகசூலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் பின்வருமாறு-

பசுமைக்குடில்: இதனைப் பொறுத்தவரை பசுமைக்குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்கவும், அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்யவும், பசுமைக்குடிலின் கட்டுமானத்தினுள் கிளிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மாற்ற வேண்டும்.

நிழல்வலைக்குடில்: இவற்றில் கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்யவும், நிழல்வலைக் குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளவும் வேண்டும்.

பல்லாண்டு பயிர்களான மா, பலா, கொய்யா, எலுமிச்சை, கிராம்பு, ஜாதிக்காயில் காய்ந்த கிளைகளை அகற்றிடவும், மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்யவும், மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்கவும், தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி ஏற்படுத்தி, நோய்த்தடுப்பு மருந்துகள் வேர்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். மேலும் இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும்.

கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்ப்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றி மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இட்டு, நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.

மிளகு பயிர்: இவற்றில் உரிய வடிகால் வசதி செய்து, டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லி மருந்துகளை வேர்ப்பகுதியில் இட்டு நோய் வராமல் தடுக்கலாம், மேலும் தாங்குச் செடிகளில் நிழலினை ஒழுங்குப்படுத்த கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

உறைபனிக் காலத்தில் துளசி செடியை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்!

கொக்கோ பயிர்: காய்ந்துபோன இலைகள் மற்றும் கிளைகளை அகற்ற வேண்டும். மரத்தின் தண்டுப்பகுதியில் போர்டோக்கலவைத் தெளிக்க வேண்டும். மேலும் முதிர்ந்த பழங்களை அறுவடை செய்ய வேண்டும் மற்றும் சிறிய செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகளோடு கயிற்றால் கட்ட வேண்டும்.வருடாந்திர பயிரான வாழையில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும், சவுக்கு அல்லது யூகாலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும்.

மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். மேலும் வாழைத்தார்களை முறையாக மூடி வைத்து, 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.

இதர தோட்டக்கலைப் பயிர்களுக்கான வழிமுறைகள்:

தோட்டக்கலைப் பயிர்களான வாழை, முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, உருளைகிழங்கு, கேரட் போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்து நீரப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலும் காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுகொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாவண்ணம் பாதுகாப்பதோடு அல்லாமல் வயல்களில் தேவையான பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்கூறப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பயிர் சேதம் ஏற்படாவண்ணம் விவசாயிகள் பாதுகாக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் காண்க:

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய்- உங்களுக்கு வந்துச்சா?

பூசணித் தோலினை வீட்டுத் தோட்டத்துக்கு இப்படியும் பயன்படுத்தலாமா?

English Summary: Super tips for farmers to protect pepper banana tree in pouring rain Published on: 17 November 2023, 12:28 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.