1. தோட்டக்கலை

பூ உதிர்வை தடுக்கும் தேமோர் கரைசல் : தயாரிக்கும் முறை இதோ!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Temor solution to prevent flower drop

தேமோர் கரைசல் ஒளிச்சேர்க்கையை அதிகரிக்கிறது மற்றும் இலைகள் வழியாக நேரடியாக ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது வேர்களை விட மிக எளிதாக மொட்டுகளை அடையும். இதனால் மொட்டுகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் அவை உதிர்வதைத் தடுக்கிறது. இந்த பதிவில், இதன் தயாரிப்பு முறையை தெரிந்துக்கொள்ளலாம்.

தயாரிப்பு: முறை 1

தேமோர் கரைசலை, வீட்டிலேயே செய்ய தேவையான பொருட்கள்:
1 லிட்டர் தேங்காய் பாலும், 1 லிட்டர் அளவு மோர் மட்டுமே போதுமானது.

தயாரிக்கும் முறை:

தயிரிலிருந்து வெண்ணெய் நீக்கப்பட்ட மோர் எடுத்துக்கொள்ளவும். தேங்காயை துருவி, மிக்ஸியில் போட்டு அரைத்து, தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு தேங்காயிலிருந்து, ஒரு லிட்டர் அளவு தேங்காய்ப்பால் எடுக்க, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, தேங்காய் பால் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் ஊற்றக்கூடாது. தேங்காயை அரைத்து, நன்றாக வடிகட்டி, திப்பி இல்லாத தேங்காய் பாலை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் 1 லிட்டர் அளவு தேங்காய் பாலையும், 1 லிட்டர் அளவு மோரையும், ஒரு மண் சட்டியில் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் மண்சட்டி இல்லை என்றால் பரவாயில்லை. ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலந்து, பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி, அதற்கு மூடி போட்டு, நிழலான இடத்தில் வைத்துவிட வேண்டும். காற்று, எக்காரணத்தைக் கொண்டும் டப்பாவிற்குள் போகக்கூடாது. இந்த கரைசல் ஐந்திலிருந்து, ஆறு நாட்கள் நன்றாக புளிக்க வேண்டும். (குறிப்பு:ஆறு நாட்களுக்கு மேல், பத்து நாட்கள் புளித்தாலும் தவறில்லை.) மண்பானையில் புளிக்க வைக்கும் பட்சத்தில், இந்த தேமோரில், நுண்ணுயிர் சத்து அதிகமாக கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

பீஜாஅமீர்தம்: இது என்ன? இதன் பயன் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்

தயாரிப்பு முறை 2

வெண்ணெய் பால் + தேங்காய் பால் + இளநீர் 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து, இந்த கலவையை ஒரு மண் பானையில் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை புளிக்கவைக்கவும். இந்தக் கலவையை தினமும் காலை மாலை இருவேளையும் கிளறவும். அது இறுக்கமாக மூடப்பட்டிருப்பதை உறுதிசெய்து, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட குழியில் 3/4 பானையை புதைக்கவும். மட்கிய, உரம் மற்றும் மண் போன்ற கரிமப் பொருட்களால் குழி நிரப்பப்பட வேண்டும். 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு 1 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி எடுத்து, 5 நாட்கள் இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறை இலைவழித் தெளிப்பு செய்து, முடிவைப் பார்க்கவும்.

பயன்பாடு:

தேமோர் கரிசல் இலைகளில் தெளிக்கப்படுகிறது. 1 லிட்டர் தண்ணீருக்கு, 50 மி.லி. செடிகளின் இலைகளில் தெளிக்கவும். மாலை மற்றும் மழை பெய்யாத நாட்களில் தெளிக்கவும். செடி பூக்க ஆரம்பித்த பிறகு வாரத்திற்கு ஒருமுறை இதை தெளிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு

வெ.சுதாகர், இளங்கலை வேளாண் மாணவன், மற்றும்
முனைவர் B.குணா,இனணைப்பேராசிரியர்,
நாளந்தா வேளாண்மை கல்லூரி, M.R பாளையம், திருச்சிராபள்ளி,
மின்னஞ்சல்:baluguna8789@gmail.com செல்:+91-9944641459 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க: 

ஹ்யூமிக் அமிலம்: மட்கிய அறிவியல் மற்றும் அது மண்ணுக்கு எவ்வாறு பயனளிக்கும்

நிலக்கடலையில் மகசூல் அதிகரிக்கும் முறை - எப்படி?

English Summary: Temor solution to prevent flower drop Published on: 15 March 2023, 02:53 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.