சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை, முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. எனவே இப்படிப்பட்டச் சூழ்நிலையில், விவசாயிகள் எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து சாகுபடி செய்வது நல்லப் பலனைத் தரும்.
எளிதான சாகுபடி எள்
தற்போதைய காலக்கட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்களுக்கு நல்ல விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. குறிப்பாக உக்ரைன்- ரஷ்யா சண்டையால் இறக்குமதி தடை செய்யப்பட்ட நிலையில் எண்ணெய வித்துக்களின் தேவை அதிகரித்துள்ளன. எண்ணெய்வித்துகளான ,நிலக்கடலை, சூரிய காந்தி ஆமணக்கு உள்ளிட்டவற்றோடு ஒப்பிடுகையில், மிகவும் எளிதான சாகுபடி என்றால் அது எள் பயிர் சாகுபடிதான்.
இதற்கு குறைந்த அளவு தண்ணீர் பாசன வசதி போதும் . மணற்பாங்கான சத்துகள் குறைந்த நிலத்திலும் சாகுபடி செய்ய முடியும்.
அதிக அளவில் கொளுத்தும் கோடை வெப்பத்தையும் தாங்கி வளரும் ஆற்றல் எள் பயிருக்கு உண்டு.
சந்தையின் தேவை அறித்து சாகுபடி செய்ய ஏற்றது எள் பயிர். மாசிபட்டம், சித்திரைபட்டம் சாகுபடியில் அமோக விளைச்சல் கிடைக்கும். VRI 1,2,3மற்றும் SVPR2,முக்கிய இரகங்கள் ஆகும்.பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்த வேண்டும். நுண்ணூட்ட உரமாக மாங்கனீஸ் சல்பேட் எக்கருக்கு, இரண்டு கிலோ கடைசி உழவில் போட வேண்டும்.பயிர் நன்றாக முளைத்து வந்த பின் களை எடுக்க வேண்டும், ஏனெனில் களை எடுக்காத பயிர் கால் பயிர் என்பது பழமொழி.
எள்பயிரில் குளிர் காலத்தை விட இந்த கோடையில் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருக்கும்.அதிக பூக்கள், காய்கள் பிடிக்க, 40நாளில் பிளோனேபிக்ஸ் 100மிலி எக்கருக்கு தெளிக்க வேண்டும். செடிகள் வளர்ச்சி சரிவர இல்லை என்றால்1% சதவீதம் டிஏபி கரைசல் தெளிக்கலாம்
எள்பயிரைத் தக்க அறுவடை தருணத்தில் அறுவடை செய்து படப்பு போட்டு,5 நாட்களுக்கு பின் தட்டி எள் விதையை சேகரிக்கலாம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
இதைக் குடித்தால், வெயிலுக்கும் Goodbye- அதிக Weightக்கும் Goodbye!
Share your comments