கோவையில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு தலா 2,500 திசு வாழைக் கன்றுகள் (Tissue Banana seedlings) இலவசமாக வழங்கப்படவுள்ளன.
திசுவாழை வளர்ப்பை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
திசு வாழை வளர்ப்புத் திட்டம் (Tissue Banana Cultivation)
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத் தோட்டக்கலைத் துறை சார்பில் திசுவாழை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக தேசியத் தோட்டக்கலை இயக்கத்தின் (National Hoticulture Mission)கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக வாழைக் கன்றுகள் வழங்கப்படுகின்றன.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 3 லட்சத்து 75 ஆயிரம் வாழைக் கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
2,500 வாழைக்கன்றுகள் (2,500 banana seedlings)
இந்தத்திட்டத்தின்படி ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2,500 கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இதனை வளர்க்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், பயன்படுத்த வேண்டிய உரங்கள், இயற்கை மருந்துகள் உள்ளிட்டவை குறித்த வழிகாட்டுதல்களும் அளிக்கப்பட உள்ளன.
எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை (Horticulture Department Office) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சு-தோல்வியில் முடிவடைந்தது!
Share your comments