உளுந்து பயிரில் அதிக மகசூல் கிடைக்க 2% டி.ஏ.பி (DAP) கரைசல் தெளிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ. முகைதீன் தெரிவித்துள்ளார்.
உளுந்து சாகுபடி
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் கடம்பாகுளம் பாசன வசதி பெறும் புறையூர், குறுக்காட்டூர், தென்திருப்பேரை, அங்கமங்கலம், ராஜபதி மற்றும் அதன் சுற்று வட்டார விவசாயிகள் 1050 ஏக்கர் பரப்பளவில் முன்கார் பருவ நெல் சாகுபடி (Paddy cultivation) செய்து அறுவடைக்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர்.
இதில் ஏறக்குறைய 300 முதல் 500 ஏக்கர் பரப்பளவில் நஞ்சை தரிசு உளுந்து (Black gram crop) விதைக்ப்பட்டு பயிர்கள் 10 முதல் 15 நாட்கள் நிலையில் உள்ளது. நஞ்சை தரிசு உளுந்து பயிரிட்டுள்ள விவசாயிகள் 2% டி.ஏ.பி கரைசலைத் தெளித்து அதிக மகசூல் (Yield) பெற அறிவுறுத்தியுள்ளனர்.
டி.ஏ.பி கரைசல் தாயாரித்தல்
4 கிலோ டி.ஏ.பி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து, மறுநாள் காலையில் தெளிந்த நீரை 190 லிட்டர் தண்ணீருடன் கலந்து விட்டால் 2 சதவிகித டி.ஏ.பி கரைசல் தயாராகி விடும். இக்கரைசலை நல்ல தண்ணீர் கொண்டு தயாரிக்க வேண்டும்.
தெளிக்கும் முறை
மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும். கைதெளிப்பான் (Hand sprayer) கொண்டு மாலை வேளையில் மட்டுமே உளுந்து பயிர்களுக்கு கரைசலைத் தெளிக்க வேண்டும். பயிர் பூக்கும் நிலையில் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும்.
இயற்கை விவசாயம் செய்பவராக இருந்தால், ஒரு டேங்க்-கிற்கு 50 மில்லிலிட்டர் பேசில்லஸ் மெகாடெரியத்தை வேர்ப்பகுதியில் தெளிக்கலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?
Share your comments