தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை (Cultivation) அதிகரிப்பதில் கவனம் செலுத்த, மாவட்ட அதிகாரிகளுக்கு வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மே 24 முதல் ஊரடங்கு (Curfew) நடைமுறையில் உள்ளது.
வாகனங்களில் விற்பனை
சென்னை உள்ளிட்ட தொற்று குறைந்த மாவட்டங்களில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கால், வீட்டில் முடங்கிய மக்களுக்காக, தோட்டக்கலை துறை (Horticulture Department) வாயிலாக காய்கறிகள், பழங்கள் போன்றவை வாகனங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கென, விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு, தோட்டக்கலை துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இக்குழுக்களில் உள்ள விவசாயிகள், நேரடியாக வாகனங்களில் பொருட்களை எடுத்து சென்று, விற்பனை செய்து வருகின்றனர்.
சாகுபடிக்கு உகந்த சூழல்
தென்மேற்கு பருவமழை (SouthWest Monsoon) காலம் துவங்கியுள்ளதால், பல மாவட்டங்களில் காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு உகந்த சூழல் நிலவுகிறது. விவசாயிகள், காய்கறிகள், பழங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவதால், சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதனால், காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதையடுத்து, காய்கறிகள், கீரைகள், மூலிகைகள் உள்ளிட்டவற்றின் சாகுபடியை அதிகரிக்க, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும், தற்போதுள்ள சாகுபடி நிலவரங்கள் குறித்தும், தோட்டக்கலைத்துறை இயக்குனர் ராமன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், அவர் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, சாகுபடி அதிகரிப்பு பணிகளில் கவனம் செலுத்தும்படி, அனைத்து மாவட்டதோட்டக்கலை இணை மற்றும் துணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க
தேனியில் உரிய பருவத்தில் பாசன நீர்! உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு
மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!
Share your comments